3 ஆவது நாளாக தொடரும் விசாரணை - தினகரனின் நண்பர் டெல்லி போலீசார் முன் ஆஜர்...

 
Published : Apr 24, 2017, 02:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
3 ஆவது நாளாக தொடரும் விசாரணை - தினகரனின் நண்பர் டெல்லி போலீசார் முன் ஆஜர்...

சுருக்கம்

dinakaran friend also apear to delhi police

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் 3 வது நாளாக டெல்லி போலீசார் விசாரணை நடைபெறுகிறது. இதில் தினகரனின் நண்பர் இன்று டெல்லி போலீசார் முன் நேரில் ஆஜரானார்.

டெல்லி ஓட்டல் ஒன்றில் டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவரை கைது விசாரணை நடத்தியதில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தினகரன் வீட்டிற்கு நேரில் சென்று சம்மன் அளித்தனர்.

அதன்படி டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் முன்பு நேற்று முன்தினம் நேரில் டிடிவி ஆஜரானார். அப்போது அவரிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து 2 வது நாளாக தினகரன் நேற்று ஆஜரானார். அவரது உதவியாளாரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் டிடிவி தொலைபேசி அழைப்புகளையும் சோதனை செய்தனர். 10 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணையில் தினகரன் பதில் அளிக்க திணறியதாக தெரிகிறது.

இந்நிலையில், 3 வது நாளாக இன்று டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரும் டெல்லி போலீசார் முன்பு ஆஜராகினர். அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

PREV
click me!

Recommended Stories

விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!