ஏன் விடியோவை வெளியிடவில்லை? தினகரன் சொன்ன திடுக்கிடும் தகவல் இதோ..!

 
Published : Sep 25, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
ஏன் விடியோவை வெளியிடவில்லை? தினகரன் சொன்ன திடுக்கிடும் தகவல் இதோ..!

சுருக்கம்

dinakaran explained why they failed to give video

ஏன் விடியோவை வெளியிடவில்லை? தினகரன் சொன்ன திடுக்கிடும் தகவல்

பரபரப்பான  அரசியல் சூழ்நிலையில், தற்போது  தினகரன்  தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் செய்தியாளர்களை  சந்தித்தார்.அப்போது  எடப்பாடி  அரசை  பற்றி  பல  எதிர்கருத்துக்களை  தெரிவித்தார். அதில், 

சசிகலா வழங்கிய முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி விலக தயாரா என தினகரன்கேள்வி எழுப்பியுள்ளார்

இதற்கு முன்னதாக, பலகருத்துக்களை பேசி வந்த தினகரன், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பதிவான CCTV  கேமரா பதிவு உள்ளது என இரண்டு நாட்களுக்கு முன்னதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து இன்று பேசும் போது. சிசிடிவி கேமரா பதிவு என்னிடம் உள்ளது என நான் சொல்லவில்லைஎன தடாலடியாக மாற்றிபேசினார்.

மேலும்,சிசிடிவி கேமரா பதிவு பிரதாப் ரெட்டியிடம் தான் இருக்கும் எனவும் சொல்லி தற்போது  அவரை வம்புக்கு இழுத்துள்ளார் தினகரன்.

மேலும்,ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, நைட்டி அணிந்திருந்ததால் தான் அவரின்  எந்த வீடியோவும் ரெகார்ட் செய்யவில்லை எனவும் தெரிவித்தார். அதாவது ஜெயலலிதா அவர்கள்  அவருக்கென தனி பாலிசி கொண்டவர்,எப்பொழுதுமே அவர் தன்னை ஒரு முழுமையான   ஆடைகளில் தான் தோற்றம் கொண்டிருப்பார்.ஆனால் மருத்துவமனையில் இருந்த போது சிகிச்சை  பெறுவதற்காக, அவருக்கு நைட்டி அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆடையில் அவர் உள்ள போது, எப்படி வீடியோ பதிவு செய்ய முடியும் எனவும், அதையும் மீறி சசிகலா அவர்கள் தான் சிறிய  வீடியோ பதிவை செய்துள்ளார் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில்,எந்த வீடியோ யாரிடம் உள்ளது? அது வெளி வருமா? வராதா?என்ற கேள்விக்கு   பதில் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..