கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை!

First Published Sep 25, 2017, 1:38 PM IST
Highlights
Karthi Chidambaram bank accounts and assets are freezing


கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக இருந்த ரூ.90 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தின் மூலம் ரூ 305 கோடியை அந்நிய முதலீடாக பெறுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் அனுமதியை பெற்றதில் நடந்த முறைகேடுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ எம் கன்வில்கர் மற்றும் டி ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம், சொத்துக்களை வாங்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்திற்கு வங்கிய்ல உள்ள நிரந்தர வைப்புத் தொகை ரூ.90 லட்சத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னை, காரைக்குடி உள்ள வங்கிகளில் உள்ள கணக்குகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

click me!