"சிசிடிவி கேமரா பதிவு" என்னிடம் இல்லை..! இரண்டே நாளில் தினகரன் பல்டி..!

 
Published : Sep 25, 2017, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
"சிசிடிவி கேமரா பதிவு" என்னிடம் இல்லை..!  இரண்டே நாளில் தினகரன் பல்டி..!

சுருக்கம்

i dont have any cctv camera regarding jayalalithaa treatment

பரபரப்பான  அரசியல் சூழ்நிலையில், தற்போது  தினகரன்  தனது ஆதரவு எம்எல் ஏக்களுடன் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது  எடப்பாடி  அரசை  பற்றி  பல  எதிர்  கருத்துக்களை   தெரிவித்தார். அதில், 

எடப்பாடி  அரசு  பெரும்பான்மையை  நிரூபிக்கத்  தயாராக இருந்தால், நாங்கள் அமைதியாக இருக்கத் தயார் என தினகரன் தெரிவித்துள்ளார். இருக்கிற வரை ஆதாயம்  அடைய வேண்டும் என்பதே  ஈபிஎஸ்., ஓபிஎஸ்ஸின்  எண்ணம் என  கூறியுள்ளார் தினகரன்

சசிகலா வழங்கிய  முதல்வர்  பதவியிலிருந்து எடப்பாடி விலகத்  தயாரா என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்

இதற்கு முன்னதாக, பல கருத்துக்களை பேசி வந்த தினகரன் தற்போது  ஜெயலலிதா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்த  போது  பதிவான  cctv  கேமரா  பதிவு தன்னிடம்  உள்ளது என இரண்டு நாட்களுக்கு  முன்னதாக  தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று நடந்த  செய்தியாளர்கள்  சந்திப்பின்  போது, தன்னிடம் cctv  கேமரா பதிவு இல்லை என்றும், அது  பிரதாப் ரெட்டியிடம்  கண்டிப்பாக  இருக்கும் என  தடாலடியாக  மாற்றி பேசியுள்ளார்.

மேலும்  இது குறித்து  விசாரணை  நடைபெற்றால், அதனை சரியான சமயத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும்  தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய  அவர், ஜெயலலிதா மரணத்தில் திடீரென  சந்தேகம் எழுவது , எதற்காகவோ திட்டமிட்ட சதி  எனக் கூறி உள்ளார். மேலும் அவர் மரணத்தில் சந்தேகம்  இருக்கும் தருவாயில், தற்போது  பதவியில் உள்ள மூத்த  நீதிபதியைக் கொண்டு கூட  விசாரணை  நடத்தட்டுமே  என  தெரிவித்துள்ளார்.

இந்த  செய்தியாளரின்  சந்திப்பின்  போது, சில  நாட்களாக   கேமரா  முன்  தலைகாட்டாமல்  இருந்த சி. ஆர். சரஸ்வதி உடனிருந்தார் .

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..