கீழடி அகழ்வாராய்ச்சி தொடர வேண்டும்; குதிரைபேர அரசின் அலட்சியத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மு.க. ஸ்டாலின்

 
Published : Sep 25, 2017, 01:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
கீழடி அகழ்வாராய்ச்சி தொடர வேண்டும்; குதிரைபேர அரசின் அலட்சியத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மு.க. ஸ்டாலின்

சுருக்கம்

Research should continue Kizhadi - Stalin

மத்திய கலாச்சார துறை அமைச்சர் அளித்த உறுதிமொழியின்படி, கீழடி அகழாய்வின் 3-வது கட்ட பணிகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 3-வது கட்ட அகழாய்வு பணிகள் நிறுத்தத்துக்கு அதிகாரி மாற்றம்தான் காரணம் என்பதை நான் நம்பவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

கீழடி அகழாய்வு பணிகளைச் சீர்குலைக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்ச்ர மங்கேஷ் சர்மாவுக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு கலாச்சாரத்துறை அமைச்சர், அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தப்படாது என்று உறுதியளித்திருந்தார்.

ஆனால், மத்திய அமைச்சரின் உறுதிமொழியை மீறி, தற்போது அகழ்வாராய்ச்சி பணியில் வேறு எந்த பொருட்களும் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், அப்படி நிறத்தப்படுவதற்கு அதிகாரி மாற்றம்தான் காரணம் என்பதை நான் நம்பவில்லை என்று மாஃபா பாண்டியராஜன் கூறியிருப்பது வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியாவது பதவியில் நீடித்தால் போதும் என்று இருக்கும் குதிரைபேர அரசு, இதுபற்றி தட்டிக்கேட்க மறுத்து வருகிறது என்றும்,  குதிரைபேர அரசு காட்டும் அலட்சியத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும், இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்க மக்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அளித்த உறுதிமொழியின்படி, கீழடி அகழாய்வின் மூன்றாவது கட்ட பணிகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..