"அடுத்த திட்டம் என்ன?" தினகரனுடன் ஆதரவு எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை… தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி பங்கேற்பு!!

Asianet News Tamil  
Published : Jun 16, 2017, 10:37 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
"அடுத்த திட்டம் என்ன?" தினகரனுடன் ஆதரவு எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை… தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி பங்கேற்பு!!

சுருக்கம்

dinakaran deep discussion with mla

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் முன்னாள் அமைச்சர்களுமான செந்தில் பாலாஜி, பழனியப்பன் மற்றும் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் டி.டி.வி.தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து  அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து டி.டி.வி.தினகரன் தான் கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று  வலியுறுத்தன..

மேலும் தினகரனை அதிமுகவை வழிநடத்திச் செல்ல ஒப்புக் கொண்டால்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் 34 பேரும் அதிமுக கொறடா சொல்லும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தனர். 

இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று டி.டி.வி.தினகரன், பெங்களூர சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சசிகலாவை சந்தித்தார்.

அப்போது, ஆட்சியில் எடப்பாடியே தொடரட்டும் என்றும் கட்சியை தினகரன் கண்ட்ரோலில் கொண்டுவர வேண்டும் என சசிகலா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் முன்னாள் அமைச்சர்களுமான செந்தில் பாலாஜி, பழனியப்பன் மற்றும் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் டி.டி.வி.தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து  அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்

PREV
click me!

Recommended Stories

திமுக அரசில் 4 முதல்வர்கள்..! தேர்​தலின்​போது அமைச்​சர்​களுக்கு நேரப்போகும் கதி..! பகீர் கிளப்பும் இபிஎஸ்..!
பாஜகவுடன் நேருக்கு நேர் மோதல்.. விஜய் களமிறங்கும் தொகுதி இதுதான்... தவெகவின் ‘வி’ சென்டிமெண்ட்..!