"கூர்மா...ராமா... இப்போது அம்மா..." ஜெ. விஷ்ணுவின் 11-வது அவதாரமாம்!!! - எம்எல்ஏ பகீர் பேச்சு!

 
Published : Jun 16, 2017, 09:26 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
"கூர்மா...ராமா... இப்போது அம்மா..."  ஜெ. விஷ்ணுவின் 11-வது அவதாரமாம்!!! - எம்எல்ஏ பகீர் பேச்சு!

சுருக்கம்

jayalalitha is the vishnu 11th birth

கடவுள் விஷ்னு தசாவதாரம் என்று யார் சொன்னது?  11-வது அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். ஜெயலலிதாவாக, அம்மாவா அவதாரம் எடுத்துள்ளார் என்று அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் சட்டசபையையே திடுக்கிடும்படி பேசியுள்ளார்.

யாரென்று கேட்கிறீர்களா....மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடிதான். தற்போது அம்மா அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாலர் டி.டி.வி. தினகரனின்தீவிர ஆதரவாளராக  உள்ளார்.

சட்டசபையில் இன்று உயர்கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கையும், விவாதங்களும் நடந்தன. அப்போது எழுந்து பேசிய மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, “ கடவுள் விஷ்னுவுக்கு 10 அவதாரங்கள் இருப்பதுமட்டும் அனைவருக்கும் தெரியும். ஆனால், 11-வது அவதாரமும் விஷ்னு எடுத்துள்ளார். அது நமது அம்மா(ஜெயலலிதா) வடிவில் எடுத்துள்ளார்’’ என்று கூறியதும் சட்டசபையில் அமர்ந்திருந்த உறுப்பினர்கள் சிலநொடிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பின் பேசிய கென்னடி, “ ஜெயலலிதா மறைவுக்குபின், கட்சியை வழிநடத்த சரியான நபர், சசிகலா மட்டுமே. அவரே கட்சியை சிறப்பாக வழிநடத்தக்கூடியவர். டி.டி.வி. தினகரன் கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்வார்’’ என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதும் சரி, மறைவுக்குப் பின்பும் சரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவரை எல்லையில்லாமல் புகழ்வது வாடிக்கைதான். ஆனால், மாரியப்பன் கென்னடி கூறியது, மற்ற உறுப்பினர்களை கொஞ்சம் திடுக் அடையச் செய்து இருக்கலாம்.

ெஜயலலிதா இறந்தபின் அவரின் ஆவி பேசுவது என்று கூறுவது வாடிக்கையாகி வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா கூறுகையில், “ ஜெயலலிதா என்னிடம் 1.5 கோடி குழந்தைகளை உன்னிடம் ஒப்படைத்து இருக்கிறேன்’’ எனத் தெரிவித்தார் என்றார் எனக் கூறினார்.

அதன்பின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் , கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து,  சில உண்மைகளை ஜெயலலிதா ஆத்மா கூறச் சொன்னது என்று பேசினார். அதன்பின் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரின் கணவர் மாதவன் ஆகியோரும் சமாதியில் அமர்ந்தனர்.

இதில் உச்சகட்டமாக, ஜெயலலிதா இறந்த ஒரு வாரத்துக்குள் தஞ்சையைச் சேர்ந்த கவுன்சிலர் சுவாமிநாதன் என்பவர், ஜெயலலிதாவுக்கு சிலை அமைத்து கோயில் எழுப்பி வழிபடத்தொடங்கினார்.

அந்த வகையில், பார்த்தால், எம்.எல்.ஏ. கென்னடி பேசியது, ‘ஓவர் இல்லை’ என்றே அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!