மோடி ஆதரவால் தினகரனை ஓரம் கட்டிய எடப்பாடியார்... செய்வதறியாமல் திணறி நிற்கும் ஆதரவாளர்கள்!

Asianet News Tamil  
Published : Jun 24, 2017, 05:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
மோடி ஆதரவால் தினகரனை ஓரம் கட்டிய எடப்பாடியார்... செய்வதறியாமல் திணறி நிற்கும் ஆதரவாளர்கள்!

சுருக்கம்

Dinakaran and gang angry against Edapadi palanisamy

ஜெயலலிதா  நினைவிடத்தில் பன்னீர் தியானம் செய்ததில் தொடங்கி  இலைக்காக தினகரன் திஹார் சிறைக்கு சென்று திரும்பியது வரை சிதறிக்கிடக்கும் அதிமுக தடத்தும் வித்தையை நாடே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. 

நொடிக்கொரு முறை பிரேக்கிங், அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை, குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என அதிமுகவின் இரு அணிகளும் முந்திக்கொண்டு பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தது கேட்ட போது பாஜக தலைவர்களே வலிய வந்து ஆதரவு கேட்டதாக இரு அணி தலைவர்களான ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் அளந்துவிட்டது என இவர்களின் நாடகம் என அரசியல் விமர்சகர்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி மற்றும் பன்னீர் என அடுத்தடுத்து குடியரசு தேர்லில் பாஜகவிற்கு தாமாக முன் வந்து ஆதரவு   தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாஜக வேட்பாளர் மனுதாக்கல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். இது பற்றி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை , அதிமுகவில் அணிகள் எல்லாம் இல்லை சசிகலா எடப்பாடி என எல்லோரும் பாஜகவை ஆதரிப்பதாக சேர்ந்து முடிவெடுத்ததாக தெரிவித்தார்.

அவர் பேட்டி கொடுத்து முடிப்பதற்குள் அக்கட்சியின் துணை பொது செயலாளர் என சொல்லிக்கொண்டிருக்கும் தினகரனோ பாஜகவிற்கு ஆதரவு என தன் பங்குக்கு அறிக்கையை விட்டு தனது இமேஜை உயர்த்திக்கொள்ள நினைத்தார். ஆனால் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர்  முரளிதர்ராவ் தினகரன் ஒரு ஆளே இல்லை என பாஜகவின் வாரிசாக தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இதற்கு முன் பேட்டியளித்த பன்னீர் செல்வமோ, கட்சி இணைப்புக்காக டெல்லி வரவில்லை, கட்சி இணைப்பு என்ற பேச்சுக்களுக்கு இடமில்லை, கட்சியே என்னிடம் தான் உள்ளது நாங்கள் ஏன் அவர்களோடு சேரவேண்டுமென கெத்தாக பேசினார்.

இப்படி ஒரு நாட்களில் ஒரே கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி அந்தர் பல்டி அடிக்கும் செயலை கண்கூடாக பார்க்க முடிந்தது. அதுவும் நம்ம துணை சபா நாயகரே சிறையிலிருக்கும் சின்னம்மாவின் அறிவுறுத்தலின் பெயரிலேயே எல்லாம் நடக்கிறது எனவும் கட்சியின் தலைமை என்றால் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் முடிவு என்றும் புது மாதிரியாக குழம்பினார்.

தம்பியின் இந்த செயலால் கொந்தளிப்பில் உச்சத்திற்குப்போன கடலூர் மற்றும் அரக்கோணம் எம்.பி க்கள் கூட்டாக்காக சேந்து அளித்த பேட்டியில் முதல்வரின் கருத்தை ஏற்று நாங்கள் நடக்கிறோம் ஆனால் தம்பி துரையோ கண்டமேனிக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார். இது மட்டுமல்ல சசியின் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு கட்சி நடத்தவேண்டுமென குரல் கொடுத்த இதே தம்பி துரை இப்போது சிறை கைதியின் ஆலோசனையின் பெயரில் நாங்கள் செயல்படுவதாக சொல்வது தவறானது.

மேலும் பேசிய அவர்கள் டெல்லி சென்றால் ஒரு பேச்சு, சென்னை சென்றால் எல்லாம் போச்சு என அலும்பல் பண்ணுவதாக புலம்பி தள்ளியுள்ளார்.

இப்படி ஆளாளுக்கு சசிக்கு எதிராக களமிறங்கியதற்கான காரணம் டெல்லி கொடுத்த உற்சாகத்தால் தான் இப்படி ஆட்டம் போடுகிறார் என சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடியிடம் மோடி ஆதரவு கேட்டபோது சசிகலாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு முறையாக அறிவிப்பதாக இருப்பதாக சொல்லியுள்ளார். 

எடப்பாடியாரின் இந்த பதிலை கேட்ட மோடியோ அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் இப்போது நீங்கள் தான் எல்லாமே கட்சியும் ஆட்சியையும் உங்கள் கையில் எதுவானாலும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என மோடியின் தூண்டுதலே தினகரனை மதிக்காமல் தில்லாக டெல்லிக்கு போனது எடப்பாடியார் அண்ட் டீம்.

எடப்பாடியாரின் இந்த அதிரடியை சற்றுமே எதிர்பார்க்காத தினகரன். தனது விசுவாசிகளுடன் ஒரு மீட்டிங்கை நடத்தி தனது தீவிர விசுவாசியான வெற்றிவேலை விட்டு நம்பிக்கை துரோகியாக கருதும் எடப்பாடியாருக்கு பதிலடி கொடுக்க வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

பாமக பொதுக்குழுவில் கண்ணீர் சிந்திய ராமதாஸ்... கதறிய தொண்டர்கள்!
தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - ராமதாஸ் முன்னிலையில் கொந்தளித்த அருள்