
உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டால் நட்த்த தயார் எனவும் அமைச்சர் வேலுமனி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
எனவே உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றபடவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது.
மேலும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் உயர்நீதிமன்றம் அறிவித்த தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை இரு முறை நீட்டித்தது தமிழக அரசு.
இதனால் உள்ளாட்சி தேர்தலை நட்த்தாமல் இதுவரை இழுப்பறி நிலை நீட்டித்து கொண்டே போகிறது.
இந்நிலையில் இன்று உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிப்பு செய்து பெரும்பான்மை இருப்பதன் காரணமாக சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றினர்.
தனி அதிகாரிகளின் பதவி காலம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டால் நட்த்த தயார் எனவும் தெரிவித்தார்.
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிப்பு தற்காலிகமானதுதான் என குறிப்பிட்டார்.
இதை கேட்ட அதிமுகவினரே அமைச்சர் நல்ல காமெடி செய்வதாக கூறி நகையாடினர்.