
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு லாயக்கற்றவர்; அவர் படிப்பறிவில்லாதவர் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளதற்கு அவரது டுவிட்டர் பக்கத்திற்கு நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில், காமெடிக்கு பெயர்போன அரசியல்வாதி யார் என்று கேட்டால், பள்ளி செல்லும் குழந்தைக்கூட சுப்பிரமணியன் சுவாமியைக் கை காட்டும்.
மணமகளுக்கு வாழ்த்து சொல்லி தாலி எடுத்து கொடுக்க சொன்னபோது மணமகளின் கழுத்துலேயே தாலியைக் கட்ட சென்றவர் சுப்பிரமணிய சுவாமி.
அந்த அளவிற்கு, தன்னுடைய நடவடிக்கைகளால் காமெடியனாகிப் போனவர் சுப்பிரமணியன் சுவாமி. தமிழக மக்களின் நலனைப் பற்றி, கொஞ்சம் கூட எந்த காலத்திலும் யோசிக்காமல் எதிர் கருத்துக்களைக் கூறிக் கொண்டு தமிழக அரசியலில் உலா வருபவர் சு. சுவாமி.
காவிரி பிரச்சனையில் கடல் நீரை குடிநீராக்கிகொள்ளுதல் என்று அதிமேதாவிதனமாக பேசியவர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ் பொரிக்கிஸ் என்று திட்டி வாங்கிக் கட்டிக் கொண்டவர்.
இப்படிப்பட்ட சிறப்பு மிக்க சுப்பிரமணிய சுவாமியை பாஜகவில் இணைத்து அவருக்கு ஒரு எம்.பி. பதவியையும் கொடுத்து வைத்துள்ளது டெல்லி மேலிடம்.
இவரது கருத்துக்கும் தமிழக பாஜக கருத்துக்கும் துளி அளவும் சம்பந்தம் இருக்காது. பாஜக தலைவர்களையே சங்கடப்படுத்தும் அளவுக்கு கருத்து கூறி வரும் சு.சுவாமி, தற்போது ரஜினியை வம்புக்கிழுத்து ரஜினி படிப்பறிவில்லாதவர், அரசியலுக்கு லாயக்கில்லாதவர் என்று டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
இதற்கு ரஜினி ரசிகர்கள், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சுப்பிரமணியன் சுவாமியை டுவிட்டரில் கலாய்த்துள்ள நெட்டிசன்கள், ரஜினி படிப்பறிவில்லாதவர் என்றால் காமராஜர் யார்? என்று கேட்டுள்ளனர்.
ரஜினி படிப்பறிவில்லாதவர் என்றால்? நரேந்திரமோடி படித்தவரா? போலி டிகிரி என்றும், படிப்பறிவுதான் அரசியலுக்கு தகுதி என்றால் உங்கள் கட்சியில் பாதிபேர் வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசியல் என்பது, பொதுமக்கள் பங்களிப்பு.
அரசியல் சட்டத்தை படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுதல் என்றும் தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றி கொஞ்சமாவது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாட்டை ஆண்ட அரசியல் தலைவர்கள் யாரும் அதிகம் படித்தவர்கள் அல்ல. தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாத சு.சுவாமி, ரஜினியை தமிழன் அல்ல என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அதிக அளவில் மோடியை, சுப்பிரமணிய சுவாமி கூறிய கருத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.