அமெரிக்க அதிபர் மகள் இவான்காவுடன் உலாவரும் டில்ஜித் .... வைரலாகும் மார்ஃபிங் போட்டோக்கள்.

Published : Mar 03, 2020, 12:19 AM IST
அமெரிக்க அதிபர் மகள் இவான்காவுடன் உலாவரும் டில்ஜித் .... வைரலாகும் மார்ஃபிங் போட்டோக்கள்.

சுருக்கம்

ஊடகப் பக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார்.பிரபல இந்திய நடிகரும், பாடகருமான டில்ஜித் தோசஞ் இவான்காவின் புகைப்படத்தை மார்ப்பிங் செய்து தன்னையும் அதில் இணைத்து, பார்ப்பதற்கு இவான்கா அருகில் டில்ஜித் தோசஞ் அமர்ந்திருப்பது போன்று வெளியிட்டிருக்கிறார்.

 

T.Balamurukan

டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் கணவர் ஜேரட் குஷ்னர் உடன் தாஜ் மஹால் முன் புகைப்படங்கள் எடுத்து வரலாற்று பதிவுகளை பதிவு செய்தார்கள். மேலும், இந்த புகைகள் ப்படங்களை தன்னுடைய சமூக ஊடகப் பக்கங்களிலும் வெளியிட்டார் இவான்கா.இந்த படத்தை மார்ப்பிங் செய்து இவான்கா தன்னுடன் இருப்பது போல் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அவருடன் மெலானியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் வந்திருந்தார்கள்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை டிரம்ப் குடும்பம் ரசித்து பார்த்து திகைத்துப்போனது.டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், கணவர் ஜேரட் குஷ்னர் உடன் தாஜ் மஹால் முன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். மேலும், இந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக ஊடகப் பக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார்.பிரபல இந்திய நடிகரும், பாடகருமான டில்ஜித் தோசஞ் இவான்காவின் புகைப்படத்தை மார்ப்பிங் செய்து தன்னையும் அதில் இணைத்து, பார்ப்பதற்கு இவான்கா அருகில் டில்ஜித் தோசஞ் அமர்ந்திருப்பது போன்று வெளியிட்டிருக்கிறார்.

இவான்கா, தன்னை தாஜ் மஹாலுக்கு அழைத்து செல்ல கேட்டதாகவும், அதனால்தான் கூட்டிக்கொண்டு சென்றதாகவும் அவர் அந்த ட்விட்டர் பதிவில் அவர் வேடிக்கையாகத் பதிவிட்டிருக்கிறார்.இதற்கு ட்விட்டர் மூலம் பதிலளித்த இவான்கா, டில்ஜித்தின் ட்வீட்டை மறுபகிர்வு செய்து, பிரமிக்கத்தக்க தாஜ் மஹாலுக்கு என்னை அழைத்து சென்றதற்காக நன்றி என்று கேலியாகத் தெரிவித்திருக்கிறார்.டில்ஜித் எடிட் செய்து வெளியிட்ட புகைப்படத்தை தவிர்த்து மேலும் சில இவான்காவின் மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படங்களும் வைரலாக பரவி வருகின்றன. 


அமெரிக்க அதிபரின் மகள் இப்படி ஜாலியாக பதிவு செய்திருப்பது அவரின் பெருந்தன்மையை காட்டியிருக்கிறது. இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் மார்பிங் செய்தவர்கள் கையில் விலங்கு மாட்டப்பட்டிருக்கும் என்றும் கமெண்ட் அடிக்கிறார்கள் நம் நாட்டு இளசுகள்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி