மக்களே உஷார்.. தமிழகத்தில் நுழைந்த டெல்டா பிளஸ் வைரஸ்.. கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு திடீர் உத்தரவு

By vinoth kumarFirst Published Jun 27, 2021, 5:17 PM IST
Highlights

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள 3 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க தலைமை செயலாளர் இறையன்புவிற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள 3 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க தலைமை செயலாளர் இறையன்புவிற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ்புஷன் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி வருகிறது. அதன் விபரத்தை, மத்திய சுகாதாரத் துறை தெரியப்படுத்தி வருகிறது.  தற்போது டெல்டா பிளஸ் எனப்படும், உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் வேகமாக பரவக்கூடியது. நுரையீரலை கடுமையாக பாதித்து, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். 

இத்தகைய வைரஸ், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகளை, கூடுதலாக பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

click me!