கிடுக்கிப்பிடி விசாரணையில் தினகரன் மனைவி அனுராதா!

 
Published : Apr 27, 2017, 06:01 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
கிடுக்கிப்பிடி விசாரணையில் தினகரன் மனைவி அனுராதா!

சுருக்கம்

delhi police investigation on dinakaran wife

சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டில் டெல்லி  குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திராவிடம் தினகரன் லஞ்சம் கொடுத்தாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சுகேஷிடம் நடத்திய வாக்குமூலத்தின் அடிப்படையில் டெல்லி போலீசார், டிடிவி தினகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் ஆஜரான டிடிவி தினகரனை  இன்று சென்னை அழைத்து வந்து விசாரணை நடந்து வருகிறது.

பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் மனைவி அனுராதாவிடம் இடைத்தரகர் சுகேஷ் சந்திராவின் புகைப்படத்தை காட்டி டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர் .

டெல்லி போலீசாரின் கேள்விக்கு அனுராதா பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினகரனின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிகிறது.

மேலும், கொச்சி மற்றும் பெங்களூருக்கு தினகரனை நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!