தொண்டர்கள் அனைவரும் பன்னீர் பக்கம் போய் விட்டார்களா? - விரக்தியில் கொதித்த அமைச்சர்கள்!

 
Published : Apr 27, 2017, 05:16 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
தொண்டர்கள் அனைவரும் பன்னீர் பக்கம் போய் விட்டார்களா? - விரக்தியில் கொதித்த அமைச்சர்கள்!

சுருக்கம்

ministers upset about all admk cadres supports ops

ஒரு காலத்தில்,  அமைச்சர்களை சந்திப்பதற்கும், மனுக்களை அளிப்பதற்கும் தொண்டர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது அந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

தொண்டர்கள் வருவார்களா? வரமாட்டார்களா? மனுக்களை தருவார்களா? தரமாட்டார்களா? என்று நான்கைந்து அமைச்சர்கள் காத்து கிடந்தும் அவர்கள் வந்தபாடில்லை.

அதனால், மணிக்கணக்கில் தலைமை நிலையத்தில்  காத்திருக்கும் அமைச்சர்கள் விரல் விட்டு என்னும் அளவுக்கு கூட தொண்டர்கள் வரவில்லை.

இதனால், எல்லா தொண்டர்களும் பன்னீர் பக்கம் போய் விட்டார்களா? என்று அங்கிருந்தவர்களை அமைச்சர்கள் விரக்தியுடன் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

முதல்வர் எடப்பாடி உத்தரவை அடுத்து, தினமும் ஐந்து அமைச்சர்கள், அதிமுக தலைமை அலுவலகத்தில் அமர்ந்து, தொண்டர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர்.

ஆனால், தொண்டர்கள்தான் எதிர்பார்த்த அளவுக்கு வருவதில்லை. அதனால் அமைச்சர்களுக்கு தர்ம சங்கடமாக உள்ளது.

அமைச்சர்கள் சீனிவாசன், ராதாகிருஷ்ணன், வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன் ஆகியோர்,  நேற்று முன்தினம் கட்சி அலுவலகம் வந்தனர். 

ஆனால், கட்சி தொண்டர்கள் யாரும் வரவில்லை; இரண்டு மணி நேரம் காத்திருந்தும், மூன்று மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.

அதேபோல்,  துரைக்கண்ணு, ராஜலட்சுமி, ராஜு உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களும், துணை சபாநாயகர் ஜெயராமனும் நேற்று கட்சி அலுவலகம் வந்தனர். அப்போதும் தொண்டர்கள் யாரும் வரவில்லை.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான நபர்கள் மட்டுமே மனு அளித்தனர். பல மணி நேரம் காத்திருந்தும், கட்சி தொண்டர்கள் வராதது, அமைச்சர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!