ஆம் ஆத்மி தலைவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி

By Raghupati RFirst Published Sep 30, 2022, 7:36 PM IST
Highlights

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து ராகவ் சதாவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர் ராஜ்யசபா எம்.பி. சதா. இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான இணைப் பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

ராகவ் சதா குஜராத்தின் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவர் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடத் தொடங்கியதிலிருந்து, இவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏதோவொரு அமைப்பு சதாவை கைது செய்ய திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க..‘TTFவோட பவர் தெரியாம இருக்கீங்க.. கொஞ்சம் தான் பொறுமை’ - மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!

எந்த வழக்கை சுமத்தி கைது செய்வது, என்ன குற்றச்சாட்டை சுமத்துவது என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்கள்’ என்று கூறினார். அவர் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்பதை கெஜ்ரிவால் குறிப்பிடவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாபில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய சதா ராஜ்யசபா எம்.பி. இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் கட்சியின் இணைப் பொறுப்பாளராக சதா சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக கட்சியின் ஊடகத் தொடர்புப் பொறுப்பாளர் விஜய் நாயரை சிபிஐ கைது செய்தது, விஜய் நாயர் கைது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்த கெஜ்ரிவால், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களை சிறைக்கு செல்ல தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்’ அரவிந்த் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..‘கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு !’

click me!