பெண்களை ஓசின்னு விளையாட்டாகப் பேசிட்டேன்.. விட்றுங்க.. அடிதாங்க முடியாமல் கதறும் பொன்முடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2022, 4:37 PM IST
Highlights

அரசு பேருந்தில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் குறித்து தான் விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்தத் தேவை இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.  

அரசு பேருந்தில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் குறித்து தான் விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்தத் தேவை இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.  கலோக்கியலாக, விளையாட்டாக தான் பேசியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது என பொன்முடி விளக்கமளித்துள்ளார். பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அவர் பேசியது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அத்திட்டங்கள்  ஒவ்வொன்றும் ஆதரவையும், அதேநேரத்தில் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. அந்த வரிசையில் பெண்களை கவரும் வகையில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச கட்டணமில்லா பயணம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பெண்கள் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். தற்போது இந்த திட்டத்தை மேற்கோள்காட்டி, திமுக அமைச்சர்கள் மேடைதோறும் பெருமை பேசி வருகின்றனர். 

இந்த வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  கட்டணமில்லா பயண திட்டம் குறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் இப்போது ஓசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என தரம் தாழ்ந்து விமர்சித்தார். அவரின் இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தைவைத்து பெண்களை கொச்சைப் படுத்தும் வகையில் அமைச்சர் இப்படிப் பேசலாமா என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி ஆட்டம் ஓவர்.. பொது செயலாளர் ஆகவே முடியாது.. கொக்கரிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  ஓ.பன்னீர்செல்வம்,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் அமைச்சரின் பேச்சை வன்மையாக கண்டித்து வருகின்றனர். அமைச்சர் இந்த ஆணவ பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி பொதுமக்களின் பயணத்தை ஓசி என பேசிய அமைச்சர் ஓசிக்கு பிறந்தவர் என பதிலடி கொடுத்துள்ளார். பொதுமக்களும் அமைச்சரின் இந்த  பேச்சை வன்மையாக கண்டித்து வருகின்றனர். 

தொடர்ந்து திமுக அமைச்சர்களின் நடவடிக்கைகள் மக்களை அவமரியாதை செய்யும் வகையில் இருந்து வரும் நிலையில் பொன்முடியின் இந்த பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பொன்முடி என்று விளக்கம் அளித்துள்ளார். அதில், மகளீர் பேருந்த பயணம் குறித்து விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டிய  தேவையில்லை,  எதார்த்தமாக கலோக்கியலாக பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால் தனது பேச்சிக்கு எந்தவித வருத்தமும் தெரிவிக்காத அவர், தனது பேச்சை பெரிது படுத்த வேண்டாம் என வெறுமனே கூறியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: மிஸ்டர் எடப்பாடி... "இனி நாங்க ஜீரோ இல்ல ஹீரோ"... இபிஎஸ்சை எகிறி அடித்த வைத்திலிங்கம்.

ஏற்கனவே பல்வேறு விஷயங்களில் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்து வரும் நிலையில் அமைச்சர்களின் ஆணவப் பேச்சுக்குகள் நடவடிக்கைகள் மக்களை வெறுப்படையச் செய்துள்ளது. ஸ்டாலின் அரசுக்கு எதிராக கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!