RSS பேரணிக்கு அனுமதி அளித்த உத்தரவை மறுஆய்வு செய்யகோரி திருமா தாக்கல் செய்த மனு.. தள்ளிவைத்தது நீதிமன்றம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2022, 3:47 PM IST
Highlights

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
 

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் தாக்கல் செய்த  மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இது அக்கட்சிக்கு அடுத்து என்ன செய்வது என்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி சுமார் 51க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தரப்பின் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஊர்வலத்திற்கு அனுமதி  வழங்கும்படி தமிழக காவல் துறைக்கு கடந்த 22ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.

இதையும் படியுங்கள்:   மிஸ்டர் எடப்பாடி... "இனி நாங்க ஜீரோ இல்ல ஹீரோ"... இபிஎஸ்சை எகிறி அடித்த வைத்திலிங்கம்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது மத நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை  சம்பந்தப்பட்டிருப்பதால் மறுஆய்வு கோர உரிமை உள்ளது என வாதிட்டார், மேலும் அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை எனவும், ஆனால் அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டு இருக்க வேண்டும் என்றும்,  மாற்றாக அது குற்றவியல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உகந்தது அல்ல எனவும், 

இதையும் படியுங்கள்:  எடப்பாடி பழனிச்சாமி ஆட்டம் ஓவர்.. பொது செயலாளர் ஆகவே முடியாது.. கொக்கரிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

எனவே அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் தரப்பில் காரசார வாதம் முன்வைக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர் மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை குற்றவியல் வழக்காக கருத முடியாது என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன் திருமாவளவன் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். 

 

click me!