
தீபாவை வேலைக்கு ஆகாதவர் என்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் விமர்சனம் செய்ததற்கு தீபா பேரவை நிர்வாகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஜெ.தீபா பேரவை நிர்வாகி பசும்பொன் பாண்டியன் என்பவர் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய மரணத்திற்கு காரணமான சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த நேற்று மழையில் இன்று முளைத்த காளான் ஜெய் ஆனந்த் என்ற விவரங்கெட்ட பொடியன் பைத்தியக்காரன் போல் பிதற்றி இருக்கிறான்.எங்களுடைய இளைய புரட்சித்தலைவி ஜெ.தீபா அம்மா அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நேரடி ரத்த வாரிசாவர் என்பது உலகம் அறிந்த உண்மை.
அவருடைய வம்சாவளி சொத்து அவருக்கு சேராமல் சசிகலா முடிவு செய்வார் என்று மனநோயாளி போல ஜெய் ஆனந்த் பேசி இருப்பது உலக வேடிக்கையானது .மேலும் நூலைப்போல சேலை தாயைப்போல பிள்ளை என்பார்கள் ஜெய் ஆனந்த் வந்த வம்சாவளி கொலை ,கொள்ளை,ஊர் சொத்தை அபகரிக்கும் வம்சாவளி என்பதை அவரின் பேட்டியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.,பொது செயலாளர் ஜெ.தீபா அம்மா அவர்கள் நேரடியாகவே அவர்களுடைய அத்தையின் மரணத்திற்கு சசிகலா காரணம் என்று நேரடியாக குற்றம் காட்டியதோடு இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் விசாரணை வரும்போது உரிய ஆதாரங்களுடன் நிருபிப்பேன் என்று வீர கர்ஜனை செய்துள்ளார் .
அவரை ஜெய் ஆனந்த் போல பொடியன்கள் நீதிமன்றத்தில் சந்திக்க தயாரா? ,அம்மா அவர்களின் நேரடி ரத்த வாரிசை பார்த்து பேசுவது எள்ளளவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.ஜெய் ஆனந்த் போன்ற விவரம்கேட்டவர்களுக்கு இதற்குமேல் பதில் சொல்லி எங்களது மரியாதையை குறைத்து கொள்ள விரும்பவில்லை .
இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.