எனக்கு அரசியலில் ஈடுபாடில்லை: உலக தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா!

 
Published : Dec 08, 2017, 11:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
எனக்கு அரசியலில் ஈடுபாடில்லை: உலக தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா!

சுருக்கம்

Deepa give Shock news for World tamilians

‘இப்போ நான் ரொம்ப பக்குவப்பட்டிருக்கேன். ஏதோ ஒரு வகையில மக்களுக்கு சேவை செய்யணும்னு ஆசைப்படுறேன். அதனாலதான் அரசியல்ல இருக்கேன்.’ என்று நல்ல பிள்ளையாய் பேசியிருக்கிறார் தீபா. 
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான தீபா, ஜெ., மறைவுக்குப் பிறகு பொதுவெளிக்கு வந்து தனிப்பேரவை, சசியோடு மல்லுக்கட்டு, பன்னீருக்கு பதிலடி, எடப்பாடிக்கு எதிரடி, ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முயற்சி...என்று பரபர பட்டாசாக இருக்கிறார். 

இவர் என்னதான் பண்ணினாலும் அத்தனையையும் காமெடியாகவே எடுத்துக் கொள்கிறது தமிழ்நாடு. போதாக்குறைக்கு அவரை தீபா! என்றழைக்காமல் பேபிம்மா, தீபாம்மா, அமுலு! ன்று செல்லப்பெயர் வைத்து வேறு அழைத்து அக்குறும்பு செய்கிறார்கள்.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு பந்தயகளத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் தீபா தனது பேட்டியில்...

“நான் மனுதாக்கல் பண்ணிடக்கூடாதுன்னு ரொம்ப தெளிவா இருந்தாங்க. மனுதாக்கல் மண்டல  அலுவலகத்தினுள் கூட என்னை நுழைய விடாம போலிஸ் தடுத்துச்சு. இதனாலதான் லேட்டாச்சு. நான் சரியான டைமுக்கு வந்துட கூடாதுன்னுன் வர்ற வழியில என் காரையெல்லாம் தடுத்துப் பார்த்தாங்க. இப்படியெல்லாம் நடக்குமுன்னு தெரிஞ்சுதான் நான் முதல்லேயே ரெண்டு வழக்கறிஞர்களை உள்ளே அனுப்பி டோக்கன் போட வெச்சிருந்தேன். 

இந்த தேர்தல்ல திட்டம் போட்டே என்னை போட்டியிட விடாம பண்ணிட்டாங்க. போட்டியிடா எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருந்திருக்கும்னு சொல்லலை. கடுமையான போட்டி நிலவுதுதான். போன தடவை எனக்கு இருந்த வரவேற்பு இந்த முறையும் கிடைக்குமுன்னு கூட நான் நினைக்கலை. ஆனா நான் இப்போ ரொம்ப பக்குவப்பட்டிருக்கேன். மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுறேன்.
நான் அரசியலுக்கு வரணும்னு ஆசையெல்லாம் படலை. இப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டேன் அப்படின்னுதான் சொல்லணும்! ஒரு ஜர்னலிஸ்டா மக்களுக்கு சேவை செய்ய நினைச்சேன். ஆனால் காலம் என்னை அரசியலுக்குள் இழுத்துட்டு வந்துடுச்சு. இதில் முழு ஈடுபாடில்லை. ஆனாலும் கடைசிவரை உறுதியோடு இருப்பேன் அரசியலில்.

அம்ருதாவை தூண்டிவிடுறதே சசி டீமின் வேலைதான். அம்ருதாவை ஒர்ரேயொரு தடவை பார்த்திருக்கேன். 2000-2001 வாக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன் ஏற்பாட்டில் சைலஜாவும், அம்ருதாவும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டாங்க. என்னோட அத்தையின் மகள் அப்படின்னு சொல்லி டிராமா போட்டாங்க. ஆனா எங்க வீட்டுக்குள்ளே அவங்களை சேர்க்காமல் எங்கம்மா விரட்டிட்டாங்க. 
அம்ருதா விஷயத்துல அதன் பின்னணியில் இருப்பது சசிகலா குடும்பம்தான். ஜெயலலிதாவின் உண்மையான வாரிசான நாங்க, ஜெ., சொத்துக்கு உரிமை கோரக்கூடாது அப்படின்னே இந்த நாடகத்தை சசி குடும்பம் நடத்துகிறது. 

இப்பவும் சொல்றேன், எப்பவும் சொல்வேன்: போயஸ்கார்டன் வீடு எங்களின் குடும்ப பாரம்பரிய அடையாளம். அதை மீட்க தொடர்ந்து போராடுவேன்.” என்றிருக்கிறார். 
ஆனாலும் அரசியலில் ஈடுபாடில்லை! என்று தீபா சொல்லியிருப்பதைத்தான் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! என்று சொல்லி வம்பாய் சிரிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!