
ஆர்,கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், சோர்ந்து போயிருந்த அவரை டி.டி.வி.தினகரன் தரப்பினர் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு அவர் மறுத்துள்ளார். ஏற்கனவே தன் மீது சந்தேகம் இருப்பதால் ஒதுங்கிக்கொள்வாதாக விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், டி.டிவி.தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் திடீர் என நடிகர் விஷாலும் இத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். இதையடத்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த வேட்பு மனுவில் கையெழுத்திட்ட இருவர் தாங்கள் அந்த படிவத்தில் கையெழுத்திடவில்லை என திடீர் என பல்டி அடித்தனர்.
இதனால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் ஆட்கள்தான் தனக்கு கையெழுத்திட்டவர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்தனர் என விஷால் குற்றம்சாட்டினார். எவ்வளவோ முயன்றும் விஷால் மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை
இதையடுத்து வேட்பாளர்களுக்கு நேற்று சின்னம் அறிவிக்கப்பட்டது. டி.டி.வி.தினகரனுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொப்பி சின்னம் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக அவர் கேட்காத குக்கர் சின்னம் அவருக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஷால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, அவர் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து டி.டி.வி. தினகரன் தரப்பிலிருந்து விஷாலிடம் பேசினார்களாம்.
உங்க ஆதரவு எங்களுக்கு வேண்டும். தலைவர் உங்களைப் பார்க்க வர ரெடியாக இருக்காரு என்று விஷாலிடம் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் விஷால் தரப்பிலோ, ஏற்கெனவே அவர்தான் என்னைத் தேர்தலில் நிற்க வெச்சாருன்னு பேசுறாங்க. இப்போ நான் அவருக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவிச்சா, ரெண்டு பேரும் கூட்டணி அமைச்சுட்டாங்கன்னு பேசுவாங்க, அதனால் என்னை ஆள விடுங்கப்பா என ஓட்டம் பிடித்திருக்கிறார்.
,