
ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை வெறும் 2600 நபர்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஒரு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இதை அடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2 பேரும் யாருக்கு கட்சியில் பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி (நாளை) அதிமுக பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வந்து பொது செயலாளர் பதவியை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் எடப்பாடி அணியினர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி எடுத்த புது அஸ்திரம்.. ஓபிஎஸ் நிலைமை பாவம்.. புலம்பும் அதிமுக ஆதரவாளர்கள்!
அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்தப்படும் பொதுக்குழு சட்டப்படி செல்லாது. அதில் நிறைவேற்றப்படும் எந்த தீர்மானமும் செல்லாது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுக்குழுவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜூலை 11 ஆம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தர்மயுத்த காலம்.. ஓபிஎஸ்ஸுடன் பயணித்ததை நினைத்து வெட்கப்படும் கே.பி. முனுசாமி!
அதே நேரத்தில் 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ்சுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுக்குழு குறித்து நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும். ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை வெறும் 2600 நபர்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்று தெரிவித்தார்.