அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி முதல் வேலுமணி வரை எவ்வளவு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு அமலாக்கத்துறை, வருமானவரித்துறையாராவது விசாரணைக்கு போனார்களா? என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்தது ஏன்.?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கோவைப்புதூரில், கோவை வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்றது, இந்த போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், காலத்தின் கொடுமை, வேண்டுமென்றே செந்தில்பாலாஜியை பொய்வழக்கில் சிறையில் வைத்துள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் அதிமுகவும் பாஜகவுன் வெற்றி பெறுவதற்காகவே செந்தில் பாலாஜியை சிறையில் வைத்துள்ளார்கள் என விமர்சித்தார். சிறையில் இருந்தாலும் கொங்குநாட்டு மக்கள் செந்தில் பாலாஜிக்கு நன்றி கடன்பட்டவர்கள். அவர் சிறையில் இருந்தாலும் அவருக்கு வெற்றியை காணிக்கையாக தருவார்கள் என கூறினார்.
மதத்தை வைத்து பிரிக்க பாஜக திட்டம்
அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது 2014-2019 வரை 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தார்கள். ஐந்து ஆண்டுகள் இருந்தீர்களே வாயாவாவது திறந்தீர்க்களா? பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் 217 கேள்விகளை கேட்டிருக்கிறார். நீங்கள் ஒரு கேள்வியாவது கேட்டீர்களா ? இன்றைக்கு 38 எம்பிக்கள் போட்டி போட்டுக்கொண்டு கேள்வி கேட்கிறார்கள் இன்று திமுக வந்தவுடன் பாராளுமன்றமே திரும்பிப் பார்க்கிறது.இந்த முறை தலைகீழா நிற்கிறது.
நாம் யாரும், எந்த மொழிக்கும்,எந்த மத்ததிற்கும் எதிரியல்ல. பிறப்பால் அனைவரும் சமம். கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மதவெறியை தூண்டி அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதத்தை வைத்து நம்மை பிரிக்கலாம், அதற்குக் கடந்த இரண்டு தேர்தல் தேர்தலிலும் எங்கள் சரியான அடி கொடுத்தீர்கள். எனவே தமிழ்நாட்டில் மதவெறி கலாச்சாரம் நடக்கவே நடக்காது.
அதிமுக - பாஜக ரகசிய கூட்டணி
தமிழ்நாட்டின் வரியில் ஒரு ரூபாய் ஒன்றிய அரசுக்கு கொடுத்தால் 23 காசு தான் தமிழ்நாட்டுக்கு வருகிறது. ஆனால் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் இரண்டு ரூபாய் 17 காசுகள் தருகிறார்கள். நமது வரியில் அவர்கள் செழிக்கிறார்கள். காரணம் நம் தமிழ்நாடு முன்னேற கூடாது முன்னேறினால் அவர்களுக்கு தாங்காது என்பதற்காக. தமிழர்களின் எதிரி யார் என்றால் பாஜக அவர்களுக்கு துணை போகிறவர்கள் அதிமுக. அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி முதல் வேலுமணி வரை எவ்வளவு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு ஈ.டி.ஐடி., சிபிஐ யாராவது போனார்களா? ஏனென்றால் ரகசிய கூட்டணி இன்னும் தொடர்கிறது. அதான் உண்மை. நாங்கள் சண்டை செய்வது போல் சண்டை செய்வோம், வெளியில் பார்ப்பதற்கு விவாகரத்து செய்து கொண்டோம், ஆனால் ஒரே அறையில் தான் படுத்து தூங்குவோம். அது தான் அவர்கள் என தயாநிதி மாறன் விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்