தயாநிதிக்கு சிக்கல் செய்த டி.டி.வி. !! மத்திய சென்னையில் பிரியும் முஸ்லீம் ஓட்டுக்கள் !!

By Selvanayagam PFirst Published Mar 16, 2019, 7:27 PM IST
Highlights

திமுக சார்பில் மத்திய சென்னை  தொகுதியில் தயாநிதி மாறன் களம் இறங்க முடிவு செய்துள்ள நிலையில், அமமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சிக்கு  டி.டி.வி.தினகரன் மத்திய சென்னை தொகுதியை ஒதுக்கி அறிவித்துள்ளார். இது தயாநிதி மாறனுக்கு பெரும் சிக்கலை உருவாக்கும் என்ற அச்சம் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40  மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக  தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. 

இதில் திமுகவுக்கு 20 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே போல் இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுளளது.

இந்நிலையில் மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய  அமைச்சர் தயாநிதி மாறன் திமுக சார்பில் போட்டியிட  உள்ளார். இதற்கான பணிகளில் தயாநிதி மாறன் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இந்நிலையில் அமமுக டி.டி.வி.தினகரன், தயாநிதிக்கு புதுத் தலைவலியை உண்டாக்கியுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடும் என டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.

அமமுகவுடன்  எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி மத்திய சென்னை தொகுதியை எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கி தினகரன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள இஸ்லாமிய ஓட்டுக்களை மொத்தமாக அறுவடை செய்துவிடலாம் என்று நினைத்திருந்த திமுகவினருக்கு தற்போது , இஸ்லாமிய ஓட்டுக்கள் பிரியும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் தான் ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, எழும்பூர், சூளை, சேப்பாக்கம், திருவல்லிக் கேணி, பெரியமேடு போன் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகள் இருப்பதால் அவர்களின் ஓட்டுகள் மொத்தமாக கிடைக்கும் என நினைத்திருந்த தயாநிதிக்கு  ஒட்டு மொத்தமாக டி.டி.வி.தினகரன் பாம் வச்சிட்டாரு. 

click me!