சீட் கொடுக்காவிட்டால் தம்பிதுரை அதிரடி முடிவு... திக்கித் திணறும் அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published Mar 16, 2019, 5:41 PM IST
Highlights

பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு கரூர் தொகுதியை ஒதுக்க எதிர்ப்புகள் உருவாகி உள்ளதால் அதிமுக திணறி வருகிறது. 
 

பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு கரூர் தொகுதியை ஒதுக்க எதிர்ப்புகள் உருவாகி உள்ளதால் அதிமுக திணறி வருகிறது. 

கரூர் எம்பியான தம்பிதுரை இம்முறையும் அங்கு சீட் கேட்டு விருப்ப மனு அளித்துள்ளார். ஆனால், இவருக்கு சீட் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். காரணம் அதிமுக - பாஜ கூட்டணி அமைவதற்கு பாஜவையும் மோடியையும் தம்பிதுரை கடுமையாக விமர்சித்து வந்தார். பாஜவை தோளில் சுமக்க அதிமுக என்ன பாவம் செய்தது என்று கடுமையாக அதிமுக கூட்டணியில் பாஜகவை எதிர்த்தார். இது பாஜக தலைமை தம்பிதுரை மீது கடும் அதிருப்தி அடைந்தனர். இப்போது பாஜக கொடுக்கும்  நெருக்கடியால் தம்பிதுரைக்கு மீண்டும் கரூரில் சீட் வழங்க, அதிமுக மேலிடம் தயக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

தம்பிதுரைக்கு செக் வைக்கவே கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, கடைசி நாளில் கரூர் தொகுதியில் சீட் கேட்டு விருப்ப மனு அளித்துள்ளார். அதிமுக மேலிடம் உத்தரவை அடுத்தே அவர் தனது தந்தைக்கு விருப்ப மனு அளித்துள்ளார் என்கிறார்கள். 

இதிலிருந்து விடுபட திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலில் தம்பிதுரை யாகம் வளர்த்து, சிறப்பு வழிபாடும் நடத்தி உள்ளார். சீட் கொடுக்கப்படாவிட்டால் தம்பிதுரை சில எல்எல்ஏக்களை அழைத்து கொண்டு வேறொரு கட்சிக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சி மீண்டும் உடையும் அபாயம் ஏற்படும் என்பதால் தம்பிதுரைக்கு சீட் வழங்குவதில் முடிவெடுக்க முடியாமல் அதிமுக மேலிடம் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

click me!