60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆபத்து.. ஊசி போடலன்னா தப்பிப்பது கஷ்டம்.. பயங்கர எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jan 24, 2022, 3:42 PM IST
Highlights

3வது அலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கும் நிலை மிக குறைவு, இரண்டாவது அலையுடன் ஒப்பிடும்போது இந்த அலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 4 முதல் 5 நாட்களில் குணமாகி விடுகின்றனர். ஆனால் ஐசியூ செல்பவர்கள் உயிரிழப்பு என்பது தொடர்கிறது. 

சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் கடந்த 22 நாட்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 19 பேர் முதியவர்கள், அதில் 15 பேர் தடுப்பூசி போடாதவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பு  போட்டுக் கொண்டால் மட்டுமே கொரோனாவில் இருந்து காப்பாற்ற முடியும் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் இரண்டு அலைகள் ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் கடந்த இரண்டாவது அலையின் போது பாதிப்பு அதிகமாக இருக்க காரணமாக இருந்தது. அதேபோல தற்போது ஒமைக்ரான் என்ற வைரஸ் மூன்றாவது அலைக்கு வழி வகுத்திருக்கிறது. டெல்டாவை காட்டிலும் ஒமைக்ரான் மூன்று மடங்கு அதி வேகமாக பரவக்கூடியது என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் அதிர்ச்சியில் உள்ளன. இந்நிலையில் டெல்லி, மும்பை, போன்ற நகரங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு செல்பவர்களில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நிலை உள்ளது. 

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் உள்ளவர்களும் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் அலை, இரண்டாவது அலை,  மூன்றாவது அலை என எத்தனை அலைகள் வந்தாலும் தடுப்பூசி மட்டுமே அதில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் என்பதால் நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல் தவணைத் தடுப்பூசியும்,  60 சதவீதத்தினர் இரண்டாவது தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர். இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தொற்றினால் பாதிக்கப்படுதல் மற்றும் அதன் தீவிரத் தன்மையை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். 

இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2வது தவணை தடுப்பூசியையே முழுமையாக செலுத்தி முடிப்பது பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், மறுபுறம் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களே பாதிக்கும் நிலை இருந்து வருகிறது, அதே நேரத்தில் ஐசியூவுக்கு செல்லும் நோயாளிகளில் 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்தான் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே தடுப்பூசி செலுத்தும் பணியே இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறிவருகின்றனர். 

இந்நிலையில் சதீஸ்கர் மாநிலம் பிளாஸ்பூரில் கடந்த 22 நாட்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 15 பேர் தடுப்பூசி போடாதவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், பிலாஸ்பூர் கொரோனா வைரஸ் தொற்று  அதிகரித்து வந்தாலும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் குணமடைந்து வருகின்றனர். வைரஸின் தாக்கம் லேசானது எனக்கூறப்பட்டாலும், பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியவில்லை, மூன்றாவது அலை அதிகளவில் வயதானவர்களை பாதிக்கிறது, ஜனவரியில் உயிரிழந்த 27 பேரில் 20 பேர் முதியவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்  அதில் 15 பேர் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், 3வது அலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கும் நிலை மிக குறைவு, இரண்டாவது அலையுடன் ஒப்பிடும்போது இந்த அலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 4 முதல் 5 நாட்களில் குணமாகி விடுகின்றனர் ஆனால் ஐசியு செல்பவர்கள் உயிரிழப்பு என்பது தொடர்கிறது. 

நோய் பரவும் வேகமும் குறைந்துள்ளது ஆனால் உயிரிழப்பு என்பது தொடர்கிறது. ஏற்கனவே சர்க்கரை, இரத்த அழுத்தம், இதயநோய் என இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொற்றுக்கு ஆளாகும் போது அவர்கள் நிலை மோசமாகி, அவர்கள் உயிரிழக்கவும் நேரிடுகிறது. எனவே குளிர்காலத்தில் முதியவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்களை வீட்டிலேயே தங்க வைக்கப்பட வேண்டும், கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது. 
 

click me!