மதமாற்றம் பற்றி பேச குஷ்புவுக்கு என்ன தகுதியிருக்குது? ஸ்டாலினை சீண்டியதற்கு விழும் பகீர் பதிலடிகள்.!

Published : Jan 24, 2022, 03:30 PM IST
மதமாற்றம் பற்றி பேச குஷ்புவுக்கு என்ன தகுதியிருக்குது? ஸ்டாலினை சீண்டியதற்கு விழும் பகீர் பதிலடிகள்.!

சுருக்கம்

ஸ்டாலினை குஷ்பு விமர்சிக்க, அதற்கு பதிலடியாக தி.மு.க. ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் குஷ்புவை சென்சிடீவாக விமர்சிக்க, இதற்கு பா.ஜ.க. பதிலடி தர….என்று பற்றிக் கொண்டிருக்கிறது விவகாரம்

நல்லாதானே போயிட்டிருந்துச்சு?! என்றிருந்த தமிழக அரசியலில் திடீரென மத ரீதியான மோதல்கள் தலை தூக்க துவங்கியுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ஸ்டாலினை குஷ்பு விமர்சித்து பேச, அதற்கு பதிலடியாக தி.மு.க. ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் குஷ்புவை சென்சிடீவாக விமர்சிக்க, இதற்கு பா.ஜ.க. பதிலடி தர….என்று பற்றிக் கொண்டிருக்கிறது விவகாரம்.

இதுதான் பிரச்னை….

அதாவது மதமாற்ற விவகாரத்தால் அரியலூரில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளதாக பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னையில் கண்டன ஆர்பாட்டம்  நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு “சிறுமியை கட்டாய  மதமாற்றம் செய்ய சொல்லி, பள்ளி நிர்வாகத்தினர் பல தொல்லைகள் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சிறுமியே வீடியோவில் பேசியுள்ளார். கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால்தான் அவர் உயிரிழ்ந்துள்ளார். ஆனால் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் இதில் வாய் திறக்காமல் மவுனமாக உள்ளார். ஏனென்றால் இதில் உண்மை இருக்கிறது என அவருக்கு தெரியும்.

மாணவி மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரையில் ஓயமாட்டோம். அவரின் மரணத்துக்கு ஒரு கண்டனம், இரங்கல் கூட முதல்வர் தெரிவிக்காமல் உள்ளார். அவருக்கு யாரும் பேப்பரில் எழுதி தரவில்லை என்று நினைக்கிறேன். தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் கூட வாய் திறக்காமல் உள்ளனர். ஸ்டாலினிடம் பேசவே பயப்படுகின்றனர். கேள்வி கேட்கும் துணிச்சல், தைரியம் எல்லாம் பா.ஜ.க.வுக்கு மட்டுமே உள்ளது.” என்று விளாசிவிட்டார்.

முதல்வரை விளாசி குஷ்பு பேசியது தி.மு.க.வின் கடும் தகிப்பை கிளப்பியுள்ளது. இதற்கு பதிலடியாக “சிறுமியின் மரணத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய போலீஸ் மூலமாக முழுமையான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அது இருக்கட்டும், மதமாற்றம் பற்றி பேச உனக்கென்னம்மா அருகதை இருக்குது? உங்களோட உண்மையான மதம் என்ன? அட, உங்களோட உண்மையான பெயர் என்ன? நக்கத் கான் – தானே நீங்கள். பிறப்பில் இஸ்லாமியராக, வளர்ப்பில் இஸ்லாமியராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்து, சென்னையில் வந்து செட்டிலான பின் சில பல பர்ஷனல் காரணங்களுக்காக இந்துவாகவே மாறிக்கொண்டவர் நீங்க. அந்த வகையில் உங்களோட ஒரிஜினல் மதத்துக்கு  துரோகம் பண்ணுனீங்க. அப்படி இந்துவாக மாறிய பிறகும், அந்த மதத்தையாவது  மதிச்சீங்களா? ருத்ராட்சமாலையில தாலி டிஸைனை போட்டுக்கிட்டு இந்துக்களை முகம் சுளிக்க வெச்சு, வேதனைப்படுத்துனீங்க.

இப்ப வரைக்கும் மதத்தை அரசியலுக்காகவும், சுயநலனுக்காகவும் பயன்படுத்துற நீங்க மதமாற்றம், மக்கள் நலன்னு பேசவே கூடாது. அதுக்கு உங்களுக்கு தகுதியே இல்லை.” என்று பொங்கியுள்ளனர்.

இதுக்கு தன் ஸ்டைலில் குஷ்பு சொல்லப்போகும் பதிலை நினைத்தால் இப்பவே தல சுத்துது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!