பொதுக்குழுவில் பெயரை கொடுக்காததால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம் பெறவில்லை என்று சி.வி. சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
பொதுக்குழுவில் பெயரை கொடுக்காததால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம் பெறவில்லை என்று சி.வி. சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். அந்த வகையில் அதிமுக சாபில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் வேட்பாளரை அறிவித்தனர். இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதை அடுத்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படம்... சென்னை விசிக தலைமை அலுவலகத்தில் தமிழில் ஒளிபரப்பு!!
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் கடிதத்தினை தேர்தல் ஆணையத்திடம் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி, தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் படிவம் சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,646 பேருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: தென்னரசுவிற்கு கிடைத்த பெரும்பான்மை!.. வலையில் சிக்கிய ஓபிஎஸ் - டாப் கியரில் எடப்பாடி பழனிசாமி !!
தென்னரசுவிற்கு பெரும்பான்மை பொதுக் குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் 92 சதவிகிதம் பேர் அதாவது 2051 வாக்குகள் தென்னரசுவிற்கு ஆதரவாக கிடைத்திருக்கிறது. பொதுக்குழுவில் பெயரை கொடுக்காததால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.