AIADMK: தென்னரசுவிற்கு கிடைத்த பெரும்பான்மை!.. வலையில் சிக்கிய ஓபிஎஸ் - டாப் கியரில் எடப்பாடி பழனிசாமி !!

By Raghupati R  |  First Published Feb 6, 2023, 6:18 PM IST

தென்னரசுவிற்கு பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.


அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பு மற்றம் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். பன்னீர்செல்வம், பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..மின் கட்டணம் கட்டவில்லையா? இன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் - மக்களே உஷார்.! முழு விபரம் உள்ளே

பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவை தலைவரால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இவர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சுற்றறிக்கை மூலம் பொதுக் குழு கூட்டப்பட்டது. பொதுக் குழுவில் மொத்தம் 2,665 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 15 பேர் இறந்துவிட்டனர். 2 பேரின் பொறுப்பு காலாவதி ஆகிவிட்டது. 

2 பேர் மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டனர். மீதம் உள்ள 2,646 பேர் வாக்களிக்க தகுதி பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அந்தச் சுற்றறிக்கையில் தென்னரசுவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்றும், வேறு ஒருவரின் பெயரை தெரிவிக்க விருப்பினால் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2501 பேர் தென்னரசுவை வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று வாக்களித்து உள்ளனர்.

இதையும் படிங்க..ரிலீசுக்கு முன்பே ரூ.246 கோடியா!.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணின்னா சும்மாவா.! லியோ செய்த சாதனை!

தென்னரசுக்கு எதிராக ஒரு வாக்கு கூட வரவில்லை. ஆனால், 145 உறுப்பினர்கள் வாக்குகளை பதிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் ஆணையத்தில் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் ஆவண செய்வதாக தெரிவித்துள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் படிவங்களை பெற்ற 128 பேரில் ஒருவர் கூட தென்னரசுவிற்கு ஆதரவாக படிவங்களை வழங்கிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ‘திடீர்’ குண்டு வெடிப்பு.. நடிகை சன்னி லியோனுக்கு என்ன ஆச்சு.? வெளியான உண்மை தகவல்!

click me!