மகன் ஒளிபரப்பக்கூடிய படத்தை பார்ப்பதற்கு CM.க்கு நேரம் இருக்கு! வேங்கைவயல் வர நேரமில்லையா? ஜலீல் கடும் தாக்கு

By vinoth kumarFirst Published Feb 6, 2023, 5:20 PM IST
Highlights

டீ க்கு கூட வழியில்லாமல் இந்த அரசை மாற்ற வேண்டும் என்ற விடிய விடிய எத்தனை தெருக்களில் ஓடி இருப்போம். துண்டறிக்கை கொடுத்து பிரச்சாரம் செய்து இருப்போம். எத்தனை வழக்குகளை சந்தித்து இருப்போம். இந்த ஆட்சி மாற வேண்டும் என்பதற்காக. உங்கள் கட்சிக்காரனாவது காசு வாங்கிக்கொண்டு உழைத்து இருப்பான். ஆனால், நாங்கள் எந்த பிரதி பலனும் இல்லாமல் உழைத்ததற்கு கிடைக்கக்கூடிய பரிசா இது. 

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்டு 40 நாட்களை  கடந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்காததை கண்டித்து சமூக செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆளுங்கட்சியை சமூக செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜலீல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட  வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்பவம் தொடர்பாக, வெள்ளனூர் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், குடிநீரில் மலம் கலந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இதையடுத்து, திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் தலைமையில், புதுக்கோட்டை டி.எஸ்.பி ரமேஷ்கிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கிராமத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்று 40 நாட்களாகியும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

40 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்யப்படாமல் இருப்பதை கண்டித்து சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய சமூக செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜலீல் பேசுகையில்;- கருணை ஒன்று இருக்கும் அதிலும் இவ்வளவு கேவலமான செயலை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இந்த மண்ணில் வாழ வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் இன்னும் சமூக நீதிகள் மறுக்கப்பட்டு தான் இருக்கிறது. ஆனால். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்கும் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி இருக்கு. சமூக நீதியை யாரும் எதுவும் செய்திட முடியாது என பலதரப்பட்ட விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், சாதியை பேசிக்கொண்டு பல பேர் உலாவ விட்டிருக்கக் கூடிய தமிழகத்தில் நாம் இருக்கிறோம் என்பது தான் உண்மை. 

என்ன சாதிய அடுக்கு முறையை நீங்கள் கட்டுப்படுத்தி விட்டீர்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். டீ க்கு கூட வழியில்லாமல் இந்த அரசை மாற்ற வேண்டும் என்ற விடிய விடிய எத்தனை தெருக்களில் ஓடி இருப்போம். துண்டறிக்கை கொடுத்து பிரச்சாரம் செய்து இருப்போம். எத்தனை வழக்குகளை சந்தித்து இருப்போம். இந்த ஆட்சி மாற வேண்டும் என்பதற்காக. உங்கள் கட்சிக்காரனாவது காசு வாங்கிக்கொண்டு உழைத்து இருப்பான். ஆனால், நாங்கள் எந்த பிரதி பலனும் இல்லாமல் உழைத்ததற்கு கிடைக்கக்கூடிய பரிசா இது. 

தமிழக அரசே புரிந்து கொள்ளுங்கள். உளவுத்துறை கவனமாக பதிவு செய்யுங்கள். எங்கள் மீது போடக் கூடிய வழக்குகளை கண்டு அஞ்சுகின்ற கூட்டம் இல்லை. ஆனால், தமிழக முதல்வருக்கு இது கண்டிப்பாக போய் சென்றடைய வேண்டும். தமிழக மக்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்கள் என்று. விஷ்ணுபிரியாவுக்கு நீதி கிடைத்து விட்டதா காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கே இது தான் நிலைமை. உங்க சாதி பெருமை கொண்டு எங்கேயாவது போய் வைங்கடா. ஆனால் இன்னும் நீங்க அடிக்க அடிக்க திமிரி எழுந்து வந்து நாங்க அடிக்க கூடிய காலம் வந்துச்சுன்னா தமிழகத்தில் யாரும் சுதந்திரமா நடமாட முடியாது. நாங்கள் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எதிரிகள் தான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஜனநாயக ரீதியாக பல விஷயங்களை கடந்து போகின்றோம்.

அங்கு இருக்கக்கூடியவன் வயிற்றில் பசியோடு வாழ்க்கை நகர்த்திக் கொண்டிருக்கிறான். அவனுக்கு குடிக்க கூடிய தண்ணீரில் கூட சுதந்திரம் இல்லைன்னா இந்த காற்று எப்படி சுதந்திர காற்றாக இருக்கும். அப்போ அம்பேத்கர் சொன்னது போல இந்த காற்று எல்லாம் விஷ காற்றாக மாறட்டும் நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.  நான் பிறந்த சுதந்திர மண்ணில் என்னால் சுதந்திரமாக வாழ முடியவில்லை. இங்கு இருக்கக்கூடிய 50, 100 குடும்பங்களில் புலனாய்வு செய்து புடுங்க முடியவில்லை என்றால் காவல்துறையின் கட்டுப்பாடுகள் உங்களுக்கு எதற்கு ஒருமையில் பேசினார். 

அதையும் தாண்டி சிபிஐ தான் சரியாக செய்கிறது என்றால் மொத்தமும் சிபிஐயாக மாற்றி விடுங்கள். எதுக்கு காவல்துறை. நாங்கள் ஒவ்வொன்றும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறி வருகிறோம். 40 நாட்களை கடந்துவிட்டது. ஆளுங்கட்சியை சேர்ந்த யாரும் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை. 

இருக்கக்கூடிய மொத்த படத்தை வாங்க நேரம் இருக்கு. பஞ்சாயத்து பண்ண நேரம் இருக்கு. மகன் ஒளிபரப்பக்கூடிய படத்தை பார்ப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நேரம் இருக்கு. ஆனால், என் இனம் சாகுது இதுபோன்று சாதிய பிரச்சனைக்குள் மாற்றுகிறார்கள். எங்கள் வீட்டு பெண்கள் கதற கதற கற்பழிக்கப்படுகிறார்கள் இதைப் பார்ப்பதற்கு உங்களுக்கு யோகியதை இல்லை என்றால் ராஜினாமா செய்து விட்டு போயிட்டே இருங்கள். 

உங்களுக்காக கஷ்டப்பட்டதற்கு தலை குனிந்து செருப்பை எடுத்து  நாங்களே அடித்துக் கொள்கிறோம். விடியல் அரசு வேண்டும் என்பதற்காக இந்த அரவை கொண்டு வந்தோம். திராவிட மாடல் திராவிட மாடல் என்று சொன்னால் எங்களுடைய மாடலும் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். இன்னும் ஒரு வருடம் தான் இருக்கு. 

இந்த ஆட்சி பொறுப்பேற்று சாதிய வன்கொடுமைகள் நடக்கவில்லையா? சாதிய ஆவணக் கொலைகள் நடக்கவில்லையா? எல்லாமே நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து ரவுடிகளும் சாதாரணமாக உலா வந்து கொண்டுக்கிறார்கள். தமிழகத்தில் ரவுடி தனம், சாராயம், கஞ்சா, போதைப் பொருட்களையும் ஒழிக்க முடியல. பல பள்ளிகளை மூடி கொண்டு இருக்கிறீர்கள். ரொம்ப வருத்தமாக இருக்கு. திருந்தி கொள்ளுங்கள் இல்லனா திருத்தக்கூடிய இடத்தில் நாங்க இருக்கிறோம் என சமூக செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜலீல் ஆவேசமாக பேசியுள்ளார். 

முன்னதாக பிரதமர் மோடிக்கு எதிராக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை தடை செய்த மத்திய அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம், பிபிசி ஆவணப்படத்தை தமிழாக்கம் மேற்கொண்டதற்கு இவர்கள் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

click me!