தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படம்... சென்னை விசிக தலைமை அலுவலகத்தில் தமிழில் ஒளிபரப்பு!!

By Narendran S  |  First Published Feb 6, 2023, 5:24 PM IST

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை சென்னை விசிக தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் தமிழில் ஒளிபரப்பியுள்ளார். 


மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை சென்னை விசிக தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் தமிழில் ஒளிபரப்பியுள்ளார். முன்னதாக குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டில் மதக் கலவரம் ஏற்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மாயமாகினர். இதுமட்டுமின்றி பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த கலவரம் அந்த சமயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பொதுமக்களின் முதலீடுகளை அதானிக்கு தாரை வார்ப்பதா.? மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய காங்கிரஸ்

Tap to resize

Latest Videos

இந்த கலவரத்தை சித்தரித்து பிபிசி தொலைக்காட்சி, இந்தியா தி மோடி குவெஸ்டீன் என்ற பெயரில் ஆவணப்படமாக  வெளியிட்டது. ஆனால் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இருந்தபோதிலும் இந்தியாவின் பல பகுதிகளில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பப்படுகிறது. சமீபமாக சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டியக்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிபிசியின் ஆவணப்படத்தை காவல்துறையின் அனுமதியுடன் திரையிட்டனர்.

இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தல்.! ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் திடீர் வாபஸ்..! பின்னனி என்ன.?

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து திரையிடப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை அம்பேத்கர் திடலில் இந்தியா: மோடி என்கிற கேள்வி என்ற பெயரில் பிபிசி ஆவணப்படத்தை தமிழில் வெளியிட்டார். இதில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இயக்குநர் வெற்றிமாறன் உட்பட விசிகவை சேர்ந்தவர்கள் பங்கேற்று பிபிசி ஆவணப்படத்தை பார்வையிட்டனர். 

click me!