Breaking: தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு... 14ம் தேதி வரை அறிவிப்பு..!

Published : Jun 05, 2021, 10:23 AM IST
Breaking: தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு... 14ம் தேதி வரை அறிவிப்பு..!

சுருக்கம்

தமிழகத்தில் 14ம்  தேதி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் 14ம்  தேதி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீவிர ஊரடங்கு கடந்த இரு வாரங்களாக அமலில் உள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டது.

 

ஜூன் 7ஆம் தேதி காலை வரை இந்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் அதிகாரிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் ஊரடங்கை மீண்டும் ஒரு வாரம் நீட்டிக்க மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதன் அடிப்படையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி