ஒன்றிய அரசு என்பதை தெரிந்துகொள்ள, அரசியல் அமைப்பு புத்தகத்தை படிங்க.. எடப்பாடியை புரட்டி எடுத்த திமுக MLA.

By Ezhilarasan BabuFirst Published Jun 5, 2021, 9:53 AM IST
Highlights

ஒன்றிய அரசு என்பதை பற்றி தெரிந்துகொள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசியலமைப்புச் சட்டத்தை புரட்டிப் பார்க்க வேண்டும் எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பதிலடி கொடுத்துள்ளார். 

ஒன்றிய அரசு என்பதை பற்றி தெரிந்துகொள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசியலமைப்புச் சட்டத்தை புரட்டிப் பார்க்க வேண்டும் எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பதிலடி கொடுத்துள்ளார். 

அதாவது, கடந்த சில நாட்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கின்றனர். இதேபோல்  தமிழகம் என்பதற்கு மாற்றாக தமிழ்நாடு என்று அழைக்கின்றனர். அதாவது இந்தியா என்பது பல ஒன்றியங்கள் இணைந்த அரசு என்பதால் அதை ஒன்றிய அரசு என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர்கள் விளக்கம் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், பாஜக, இந்து முன்னணி, பாஜக ஆதரவாளர்கள் இதை கடுமையாக எதிர்ப்பதுடன், மத்திய அரசு என்று சொல்வதே சரி என்றும்,  ஒன்றிய அரசு என்று சொல்லக்கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் தமிழ்நாடு என்றால் தமிழகம் என்ன தனிநாடா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசை மத்திய அரசு என்றுதான் அழைக்க வேண்டும், ஒன்றிய அரசின் என்று அழைக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.மேலும்,  தற்போது ஒன்றிய அரசு என்று அழைப்பவர்கள் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு என்றுதான் அழைத்தார்கள் எனவும் அவர் மேற்கோள் காட்டினார்.  

இந்நிலையில்  எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அப்பகுதியை சார்ந்த  ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள் மற்றும் 5 கிலோ அரிசி என 500 பேருக்கு வழங்கினார். பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக முதல்வர் வழிகாட்டுதல் படி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம், 

மேலும் முன்னால் கழக தலைவர் மற்றும் முன்னால் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 500 நபர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது என்றார், மேலும் மத்திய அரசை மத்திய அரசு என்று அழைப்பது சிறந்தது என எடப்பாடி பழனிச்சாமி கூறியதைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு என்றை உள்ளது, எனவே எடப்பாடி பழனிசாமி அரசியலமைப்பு சட்டத்தை புரட்டிப் பார்க்க வேண்டும் என பதிலளித்தார். அதேபோல் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!