தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாகவே என்ன நடக்கிறது என்று தெரியாமல் அக்கட்சியின் தொண்டர்கள் குழம்பி போய் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, பாஜக ஐடி விங் செயலாளர், திலீப் கண்ணனும் கட்சியில் இருந்து வெளியேறினார்.
ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாகவே என்ன நடக்கிறது என்று தெரியாமல் அக்கட்சியின் தொண்டர்கள் குழம்பி போய் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, பாஜக ஐடி விங் செயலாளர், திலீப் கண்ணனும் கட்சியில் இருந்து வெளியேறி அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இதையும் படிங்க;- அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா? அண்ணாமலை அப்படி கூறினாரா? பாஜக கொடுத்த பரபரப்பு விளக்கம்.!
இந்நிலையில், பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார் தற்போது தன்னுடன் நெருக்கமாக இருந்து வந்த பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அண்ணாமலைக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.
இதையும் படிங்க;- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது.. நாங்க பாக்குற இடத்துல பாத்துக்குறோம்.. பாயிண்டை பிடித்த ஓபிஎஸ் டீம்.!
ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் சால்வை அணிவித்து வரவேற்றார்.