"பைத்தியம் மீண்டும்மீண்டும் ஒரே செயலை செய்கிறது"! .. மத்திய அரசை விளாசும் காங்கிரஸ் ராகுல்காந்தி.!!

By T BalamurukanFirst Published Jun 14, 2020, 8:27 AM IST
Highlights

மத்திய அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் எந்த பயனும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
 

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் பலகட்ட ஊரடங்கை அமல்படுத்தி வருகிறதுஇந்தியாவில் மகாராஷ்ட்ரா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.பாதிப்பு நாளுக்கு நாள் தனது வீரியத்தை காட்டி வருவதால் ஒற்றை இலக்கத்தில் இருந்து இறப்பு விகிதம் இரட்டை இலக்கத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு சாமானிய மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.இவரைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ பழனி இந்த தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.

 மத்திய அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கையால் எந்த பயனும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

 

அந்தவகையில் மீண்டும் அவர் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசின் 4-ம் கட்ட ஊரடங்கிலும் நோய்த்தொற்று அதிகரித்து இருப்பதாக வரைபடம் ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ள அவர், ‘பைத்தியம் மீண்டும் மீண்டும் ஒரே செயலை செய்துவிட்டு வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்கிறது’ என்ற மேற்கோள் ஒன்றையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

click me!