கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ பழனி குணமடைய ..அமைச்சர் வேலுமணி ட்விட்டரில் பிராத்தனை.!!

Published : Jun 13, 2020, 11:38 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ பழனி குணமடைய ..அமைச்சர் வேலுமணி ட்விட்டரில் பிராத்தனை.!!

சுருக்கம்

40 ஆயிரத்தையும் கடந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிகபட்சமாக, சென்னையில் மட்டும்தான் பெரும்பாலான தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 40 ஆயிரத்தையும் கடந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிகபட்சமாக, சென்னையில் மட்டும்தான் பெரும்பாலான தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்களும் இந்த நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, எம்எல்ஏ பழனி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், எம்எல்ஏ பழனி விரைவில் குணம்பெற வேண்டும் எனக் கூறி அமைச்சர் எஸ்பி வேலுமணி டுவிட்டரில் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “#COVID19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பர், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. பழனி அவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்,” எனக் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!