ஊரைக்காக்கும் போலீஸ்க்கும், மாணவர்களை காக்கும் ஆசிரியர்களுக்கும் மதுபானக்கடையில் வேலை.! கடுப்பில் காங்கிரஸ்.!

Published : Jun 13, 2020, 11:23 PM IST
ஊரைக்காக்கும் போலீஸ்க்கும், மாணவர்களை காக்கும் ஆசிரியர்களுக்கும்  மதுபானக்கடையில் வேலை.! கடுப்பில் காங்கிரஸ்.!

சுருக்கம்

மத்திய பிரதேசத்தின் ரேவாவில் பெண் போலீஸ்காரர்களுக்கு மதுக்கடையில் வேலை கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியர்களுக்கும் அதே பணி கொடுக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுப்பட்டுள்ளனர்.  

 மத்திய பிரதேச மாநிலம், சாகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு கடந்த 10ம் தேதி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 5 ஆசிரியர்கள் மதுபானக் கடையில் பணியாற்ற வேண்டும் என்று, மாவட்ட துணை கலெக்டர் (கலால்) அலுவலகத்தில் இருந்து வந்த அந்த உத்தரவு கடிதம்  விவகாரம் நேற்று சமூக ஊடகங்களில் வெளிவந்ததால், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ​மாநில ​காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் ரேவா நகரில் உள்ள மதுபானக் கடையில் பெண் போலீஸ்காரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பெண் போலீஸ்காரர் மதுக்கடையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி அந்த படங்கள் வைரலாகியது. இது தொடர்பாகஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கண்டனங்களை எழுப்பியது. முன்னதாக மாநில மதுபான ஒப்பந்தக்காரர்களுடனான பிரச்னையால், சுமார் 70 சதவீத மதுபான ஒப்பந்தக்காரர்கள் தங்கள் ஒப்பந்தங்களை அரசிடம் திருப்பி ஒப்படைத்தனர். அதனால், மதுபானக் கடையை கலால் துறையே இயக்க முடிவு செய்தது.

இதற்காக, முதலில் பெண் போலீஸ்காரர்கள் மதுபானக் கடையில் பணி அமர்த்தப்பட்டனர். இப்போது ஆசிரியர்களுக்கு அந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் யாதவ் குற்றம்சாட்டினார். 
 
PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!