மாடுகளுக்கு மூக்கணாங் கயிறு போடுவது மிருக வதை: நீதிமன்றத்தில் வழக்கு.. மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.

Published : Aug 19, 2021, 02:23 PM ISTUpdated : Aug 19, 2021, 02:30 PM IST
மாடுகளுக்கு மூக்கணாங் கயிறு போடுவது மிருக வதை: நீதிமன்றத்தில் வழக்கு.. மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.

சுருக்கம்

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கு சதையில் ஓட்டையிட்டு மூக்கணாங்கயிறு  போடுவதால், 

மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு  மூக்கணாங்கயிறு  போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை அயனாவரத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கு சதையில் ஓட்டையிட்டு மூக்கணாங்கயிறு  போடுவதால், மாடுகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் வகையில் உள்ள மிருகவதை தடைச் சட்டப் பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டது. 

உலக அளவில் மாடுகளை கட்டுப்படுத்த, இந்த நடை முறை தான் பின்பற்றுவதாக தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம்  என தெரிவித்ததுடன் , இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை  8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு