நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்கிறது திமுக... பதறும் எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Aug 19, 2021, 1:06 PM IST
Highlights

கொடநாடு வழக்கை திமுக மீண்டும் விசாரணை தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி ஒரு விதமான பதற்றத்துடனே காணப்படுகிறார்

நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை தேர்தல் அறிக்கையில் தொடர்புப்படுத்தக்கூடாது என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஆளுநர் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாததை மறைக்க பொய் வழக்கு போடுகிறது. ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தது தான் திமுக அரசின் 100 நாள் சாதனை. திமுக அரசின் 100 நாட்களில் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை தற்போதைய அரசு கிடப்பில் போட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படவில்லை, திமுக அரசு முடக்கியுள்ளது.

அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது திமுக பொய் வழக்கு போடுகிறது. கொடநாட்டில் அவ்வப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பது வழக்கம். கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை தேர்தல் அறிக்கையில் தொடர்புப்படுத்தக்கூடாது. கொடநாடு வழக்கில் கைதானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர் வாதாடினார். நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்கிறது திமுக அரசு. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொடநாடு வழக்கை திமுக அரசு  கையில் எடுத்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

கொடநாடு வழக்கை திமுக மீண்டும் விசாரணை தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி ஒரு விதமான பதற்றத்துடனே காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!