கோவை ராமநாதபுரம் பகுதியை கடந்து குறிச்சி செல்வதற்காக நஞ்சுண்டாபுரம் வழியாக ஆனந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், ஆனந்தை இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் சரிந்து விழுந்தார்.
கோவை அருகே இருக்கும் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளராக இருந்து வருகிறார். நேற்றிரவு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து அமைப்புகள் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. அதில் கட்சியினருடன் ஆனந்த் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பிறகு ஆனந்தும் அவருடைய நண்பரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியை கடந்து குறிச்சி செல்வதற்காக நஞ்சுண்டாபுரம் வழியாக ஆனந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், ஆனந்தை இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் சரிந்து விழுந்தார். உடனடியாக சுதாரித்து கொண்ட ஆனந்த், தனது நண்பர் ஹரி என்பவருக்கு போன் செய்து விபரத்தை தெரிவித்தார். அதைக்கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து ஹரி, ஆனந்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காயம்பட்ட இடத்தில் 20 தையல்கள் போட்டனர்.
நாடகக்காதல் ஆதரவாளருக்கு திரௌபதி சாதிவெறியாக தான் தெரியும்..! வீரமணியை வெளுத்து வாங்கிய ராமதாஸ்..!
இதனிடையே தகவலறிந்து இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் வழிகள் அனைத்தும் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக ஆனந்த் தற்போது கோவை அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.