சொத்து குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு சிக்கல்.! மீண்டும் நேரில் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Ajmal Khan  |  First Published Aug 7, 2023, 12:46 PM IST

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் வருகின்ற 29ம் தேதி அவரையும் அவரது மனைவி ரம்யாவையும் நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 


முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்

தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, காமராஜ், அன்பழகன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து அதிமுக ஆட்சியில் அமைச்சரவையில் 8 ஆண்டு காலமாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

வருமானத்திற்கு அதிகமாக 53 சதவீதம் அதாவது , 35 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக கடந்த மே மாதம் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் 216 பக்கத்தில்  குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் மூலம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் கடந்த 5ம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.  இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்  அவரது மனைவி ரம்யாவையும் வருகின்ற 29ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

Breaking News : செந்தில் பாலாஜிக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

click me!