Breaking News : செந்தில் பாலாஜிக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Ajmal Khan  |  First Published Aug 7, 2023, 10:53 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.


செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து  நடைபெற்ற பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது. தற்போது புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

செந்தில் பாலாஜிக்கு 5 நாட்கள் காவல்

மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை. கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தக்கல் செய்ய முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

click me!