தேர்தலில் வாழ்வா சாவா என்ற நிலை பாஜகவுக்கு அல்ல, திமுகவுக்கு தான் - அண்ணாமலை பேட்டி

By Velmurugan s  |  First Published Aug 7, 2023, 10:48 AM IST

வருகின்ற தேர்தலில் வாழ்வா, சாவா என்ற என்ற நிலை பாஜகவுக்கு இல்ல என்று குறிப்பிட்டுள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு தான் அந்த நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை விளக்குத்தூண் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை நடைபயணம் மேற்கொண்டார். நடைப்பயணம் நிறைவுற்ற பின்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறுகையில், "அமித்ஷா சொன்னது என்னவென புரிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியாது. நம்முடைய தாய் மொழியில் எல்லா கல்வியும் மாற வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக உள்ளார்.

Latest Videos

undefined

ஐந்தாவது தமிழ்ச்சங்கம் எடுத்தவர் பிரதமர் மோடி தான். தமிழ் மொழிக்கு பிரதமர் தொடர்ந்து உறுதுணையாக இருப்பார். ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு தெரியாது. அவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை. பிரதமர் மோடி இந்தி தொன்மையான மொழி என பேசியிருக்கார் என்றால் அந்த ஆதாரத்தை காட்டவும். தமிழ் மொழி போல எந்த மொழியும் கிடையாது என பிரதமர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

ஒரு மதத்திற்கு ஆதரவு, ஒரு மதத்திற்கு எதிர்ப்பா? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட இந்து அமைப்புகள்

ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் வருவது நல்லது தான். அப்போது தான் அவர் ஏதாவது சேட்டை செய்து பாஜகவின் இடங்களை மேலும் அதிகரிக்க உதவி செய்வார். வாழ்வா, சாவா தேர்தல் பாஜகவுக்கு அல்ல. திமுகவுக்கு தான். இந்த தேர்தலில் திமுக தோற்றால் தலைமையில் மாற்றம் வரும். நேர்மையாக உட்கட்சி தேர்தலை நடத்தினால் கனிமொழி தான் திமுகவின் தலைவர் ஆவார். காரணம் குடும்ப ஆட்சி வேண்டாம் என்று திமுகவினரே சொல்லிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்; காவல் துறை தேடுதல் வேட்டை 

செல்லூர் ராஜுவை பொறுத்த வரை அவர் குறித்து நான் சொன்ன கருத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ள போவதில்லை. 10 ஆயிரம் முறை கேட்டாலும் ஒரே பதில் தான். செல்லூர் ராஜூ குறித்து பேசி என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ளப்போவதில்லை. என்னுடைய பேச்சு அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்" என தெரிவித்தார்.

click me!