எல்லா இடத்திலும் ஊழல் செய்யும் கட்சி திமுக.. திருச்சி பொதுக்கூட்டத்தில் போட்டு பொளந்த அண்ணாமலை!

Published : Jun 07, 2022, 10:54 PM IST
எல்லா இடத்திலும் ஊழல் செய்யும் கட்சி திமுக.. திருச்சி பொதுக்கூட்டத்தில் போட்டு பொளந்த அண்ணாமலை!

சுருக்கம்

மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து மிரட்டி வருகிறார். மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் நால் ரோட்டில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், “அமைப்பு சார தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் 62 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு 2 லட்சம் உதவித் தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. ஏழை எளிய மக்கள் உயர வேண்டும்’ அவர்களும் முதலாளிகளாக வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஜி.எஸ்.டி.யில் எவ்வளவு நிதி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கே தெரியவில்லை. 

பிரதமர் சென்னைக்கு வந்த போது ஜிஎஸ்டி நிலுவை தொகையை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்றுய் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டார். ஜிஎஸ்டியின் மூலம் ரூ.9, 602 கோடியை அதை நாங்கள் கொடுத்து விட்டோம் என்று பிரதமர் மேடையிலேயே கூறி விட்டார். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிதாக காஸ்டியூம் போட்டிருக்கிறார். மீண்டும் காவி வேட்டி கட்டத் தொடங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து மிரட்டி வருகிறார். மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.  இதேபோல சிதம்பரம் கோயில் விவகாரத்திலும் அமைச்சர் சேகர் பாபு தலையிடுகிறார். 

தமிழக பால் வளத் துறை அமைச்சர் நாசரும் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் போட்டிபோட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். நியூட்ரீசன் திட்டத்தில் கமிஷன் நடைபெற்றுள்ளது. அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிப்போம். அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திமுக வளர்ந்துள்ளது.” என்று அண்ணாமலை பேசினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!