Vaiko: மு.க. ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி மலை.. மோடியின் 8 ஆண்டு ஆட்சி மடு.. தெறிக்கவிட்ட வைகோ..!

By Asianet Tamil  |  First Published Jun 7, 2022, 9:46 PM IST

திமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் காலக்கட்டம்தான் தமிழ்நாட்டின் பொற்காலம்.


திமுகவின் ஓராண்டு ஆட்சிக் காலத்துக்கும் பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி காலத்துக்குமான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட மதிமுகவின் மறைந்த மாவட்டச் செயலாளர் சேதுமாதவன் திருவுருவப் படத் திறப்பு விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையம் வந்தார். திருச்சிக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து வந்த வைகோவை திருச்சி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர். பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதிமுகவினர் கொள்கை உறுதியோடு இருப்பதைப் பார்க்கவே து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுடைய கட்சியில் இணைந்திருப்பவர்கள் அனைவரும் கொள்கை உணர்வோடு இருப்பவர்கள்.

Tap to resize

Latest Videos

தமிழ் நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை. மக்கள் வழங்கிய பேராதரவோடு கருணாநிதி வகுத்து தந்த பாதையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் காலக்கட்டம்தான் தமிழ்நாட்டின் பொற்காலம்.  திராவிடக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்தச் சமரசமும் இல்லாமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், திமுகவும் உறுதியோடு இருக்கிறது. திமுகவின் ஓராண்டு ஆட்சிக் காலத்துக்கும் பாஜகவின் 8 ஆண்டு ஆட்சிக் காலத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. திமுக ஆட்சி மலை என்றால், பாஜக ஆட்சி மடு” என்று வைகோ தெரிவித்தார். 

click me!