திமுக தமிழகத்தின் கொரோனா வைரஸ்.! ஸ்டாலின் முன்ஜாமீன் எடுத்துக்கொள்வது நல்லது.!! ஹெச்.ராஜா எச்சரிக்கை.!!

Published : May 24, 2020, 12:17 AM IST
திமுக தமிழகத்தின் கொரோனா வைரஸ்.! ஸ்டாலின் முன்ஜாமீன் எடுத்துக்கொள்வது நல்லது.!! ஹெச்.ராஜா எச்சரிக்கை.!!

சுருக்கம்

சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்.பாரதி நீதி துறையில் தாழ்த்தப்பட்டவர்களை நிதிபதியாக்கினார் திமுக தலைவர் கலைஞர். இது திமுக போட்ட பிச்சை என்று பேசியிருந்தார். இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

இந்த பேச்சு சம்மந்தமாக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இப்போது அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை பார்க்க அனுமதிக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுவிக்கபட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் முன் ஜாமீன் கோரியும் தங்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரியும் மனு தாக்கல் செய்தனர்.இதுகுறித்து ஹெச்ராஜா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேடியளித்துள்ளார். அதில், பட்டியல் சமூகதின் மீது நவீன தீண்டாமை உள்ளது. திமுக தமிழகத்தின்கொரோனா வைரஸ். இதை முழுமையாக ஒழிக்காமல் தமிழகத்தில் எந்தச் சமூகமும் முன்னேற முடியாது அந்தளவுக்கு மோசமான தீயசக்திகள்.ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.ஏனென்றால் முரசொலி அலுவலகம் மூலப்பத்திரம் பிரச்சனையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!