தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 ரயில்கள் இயக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை.!!

By T BalamurukanFirst Published May 24, 2020, 12:17 AM IST
Highlights

ஏசி இல்லாத 4 ரயில்கள் மட்டும் தமிழகத்திற்கு இயக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ரயில்வே துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 


ஏசி இல்லாத 4 ரயில்கள் மட்டும் தமிழகத்திற்கு இயக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ரயில்வே துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 4வது முறையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாள்தோறும், ஏ.சி. அல்லாத 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தமிழகத்துக்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே துறைக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.இதன்படி கோவை - மயிலாடுதுறை, விழுப்புரம் - மதுரை, கோவை - காட்பாடி, திருச்சி - நாகர்கோவில் வழித் தடங்களில் ரயில்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரயில்வே அமைச்சகம் தென்னக ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த  ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்கு ஆன்லைன் டிக்கெட்டுடன் வரும் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

click me!