சிக்கிம் தனி நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு.!! பதறிப்போன சிக்கிம் மாநில அரசு..!

By T BalamurukanFirst Published May 23, 2020, 11:38 PM IST
Highlights

சிக்கிம் தனி நாடு என்று விளம்பரம் வெளியிட்டதை திரும்ப பெற்றுள்ளதாகவும் இது போன்ற பிழைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

சிக்கிம் தனி நாடு என்று விளம்பரம் வெளியிட்டதை திரும்ப பெற்றுள்ளதாகவும் இது போன்ற பிழைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு சிவில் பாதுகாப்பு படையினருக்கான தன்னார்வலர்களை சேர்ப்பதற்காக அறிவிப்பு ஒன்றை செய்தி தாள்களில் வெளியிட்டிருந்தது. இந்தியாவை சேர்ந்த சிக்கிம் மாநிலத்தையும் தனி நாடு என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

 சிக்கிம் மாநில தலைமை செயலாளர்... 'சிக்கிம் மாநிலம் 1975ம் ஆண்டு மே மாதம் 16 ம் தேதி 22 வது மாநிலமாக மாறியது. அன்றில் இருந்து இந்திய குடிமக்கள் என்பதில் பெருமை கொள்ளும் மக்களுக்கு இந்த விளம்பரம் வேதனையளிக்கிறது. இந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் சிக்கிம் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் வேறு ஒரு விளம்பரத்தை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டார்.

சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தனது டுவிட்டர் "பக்கத்தில் சிக்கிம் இந்தியாவின் ஒருபகுதி. இந்த பிழை கண்டிக்கத்தக்கது.  கடந்த வாரத்தில் தான் மாநில தினம் கொண்டாடப்பட்டது. இதனை டெல்லி அரசு சரி செய்ய வேண்டும்" பதிவிட்டுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்...'சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். இது போன்ற பிழைகள் பொறுத்து கொள்ள முடியாது. விளம்பரம் திரும்ப பெறபட்டு உள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார்.இந்த தவறுக்கு காரணமாக இருந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளதாக டெல்லி மாநில துணைநிலை கவர்னர் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
 

click me!