இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது.. காரணம் இதுதான்.. சென்னை மாநகராட்சி பகீர்.

Published : Jun 28, 2021, 11:22 AM IST
இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது.. காரணம் இதுதான்.. சென்னை மாநகராட்சி பகீர்.

சுருக்கம்

கொரோனா தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லாத காரணத்தினால் சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெறாதென சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லாத காரணத்தினால் சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெறாதென சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  நாளுக்கு நாள் கொரோனா தொற்றை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சியால் எடுக்கப்பட்டு ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையங்கள், மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

சென்னையில் 26ம் தேதி வரை 25,05,796 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு வர வேண்டிய தடுப்பூசிகள்  வந்து சேராததால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தடுப்பூசி முகாம் நடைப்பெறாது என சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற வாரம் தடுப்பூசி செலுத்துவதற்கான சென்னை மாநகராட்சி பிரத்தியேகமாக ஒரு இணைய தளத்தை உருவாக்கியது.

இந்த இணையதளத்தில் பதிவு செய்தால் தடுப்பூசி போடப்படும் நேரம் மற்றும் நாள் அதில் தெரிவிக்கப்படும் என்றும், அந்த நாட்களில் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளல வரலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த இணைய சேவை பொதுமக்களிடையே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இன்று இந்த இணைய தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னையில் கொரோனோ தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகவே இன்று தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மீண்டும் தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!
சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை