தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டும் மக்கள்.. விநியோகம் செய்ய முடியாமல் திணறும் மத்திய அரசு.

By Ezhilarasan BabuFirst Published Jun 28, 2021, 10:31 AM IST
Highlights

ஜூன் மாதத்திற்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் தற்போது வரையிலும் 37 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக 1,44,48,550 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் இதுவரையிலும் 1,41,50,249 பேர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் தடுப்பு ஊசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக தொடர்ச்சியாக தமிழகத்தில் மே மாத தொடக்கத்தில் இருந்து தடுப்பூசி தட்டுப்பாடு  நிலவி வருகிறது.

 

மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஜூன் மாதத்திற்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் தற்போது வரையிலும் 37 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து கடைசியாக 24ஆம் தேதி 3.21 லட்சம் தடுப்பூசிகள் வந்திருந்தது அதற்கு அடுத்து நான்கு நாட்களாக தடுப்பூசிகள் சென்னைக்கு வராததால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பல  தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தவில்லை, குறிப்பாக சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று தடுப்பூசி செலுத்தவில்லை தடுப்பூசி வந்தால்  தடுப்பூசி செலுத்துவது குறித்த  அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசின் கையிருப்பில் 1 லட்சத்திற்கும் குறைவான தடுப்பூசி மட்டும் தான் உள்ளது. தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே தடை இன்றி அனைத்து மையங்களிலும் தடுப்பூசி செலுத்த முடியும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

 

click me!