பிரிட்டனில் உருமாறிய கொரோனா .. தமிழகத்திற்கு பயங்கர எச்சரிக்கை.. அலாரம் அடிக்கும் ராதாகிருஷ்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2021, 11:00 AM IST
Highlights

அதேபோல் அடுத்து வரக்கூடிய இரண்டு மாதங்கள் சுகாதாரத்துறைக்கு சவாலானதாக இருக்கும், எனவே மாவட்ட நிர்வாகம் நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், 

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிப்பதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வந்தாலும் நோய் பரவல் மேலும் அதிகரிக்காத வண்ணம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், அதேபோல் 67 லட்சம் பேர் இரண்டாவது தவனை தடுப்பூசியை குறித்த காலத்திற்குள் செலுத்துவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், அதேபோல் மக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

அதேபோல் அடுத்து வரக்கூடிய இரண்டு மாதங்கள் சுகாதாரத்துறைக்கு சவாலானதாக இருக்கும், எனவே மாவட்ட நிர்வாகம் நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், ஆவடி, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து காணப்பட்டுள்ள நிலையில், நோய் பாதிப்பு பகுதிகள் மற்றும் மற்ற மாவட்டங்களில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
 

click me!